இந்த பையனுக்கு புத்தியே இல்ல... வெளில அனுப்பிட்டு, அவரை உள்ளே கொண்டு வாங்க - முன்னாள் வீரர் பேட்டி! 1

“ரிஷப் பண்ட்டுக்கு பொறுப்பில்லை. அவரை வெளியில் அனுப்புங்கள்” 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேட்டி அளித்துள்ளார்.

இந்திய அணியில் நிலவி வரும் ஒரே கேள்வி, ரிஷப் பண்டிற்கு ஏன் இத்தனை வாய்ப்புகளை பிசிசிஐ கொடுத்து வருகிறது? என்பதுதான்.

இந்த போட்டியில் நன்றாக விளையாடுவார், அடுத்த போட்டியில் நன்றாக விளையாடுவார் என்று தொடர்ச்சியாக பல வாய்ப்புகள் அவருக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. ஆனால் அதனை ரிஷப் பண்ட் சரிவர பயன்படுத்தவில்லை.

இந்த பையனுக்கு புத்தியே இல்ல... வெளில அனுப்பிட்டு, அவரை உள்ளே கொண்டு வாங்க - முன்னாள் வீரர் பேட்டி! 2

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் ஒருநாள் தொடரிலும் இப்படித்தான் பல வாய்ப்புகள் அவருக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன. முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 15 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். ஆனாலும் இரண்டாவது போட்டியில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

நன்றாக விளையாடிய சாம்சன் அந்த வாய்ப்பை பெறவில்லை. மேலும் மேலும் அவருக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைக்கிறது.

இந்நிலையில் ரிஷப் பண்டிற்கு இனியும் பொறுப்பு வரவேண்டும் என்றால், அவரை சில காலம் வெளியில் அமர்த்த வேண்டும். வாய்ப்புகள் கொடுத்துக் கொண்டே இருந்தால் ஒருபோதும் அதை உணர மாட்டார் என்று கடுமையாக சாடி இருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

இந்த பையனுக்கு புத்தியே இல்ல... வெளில அனுப்பிட்டு, அவரை உள்ளே கொண்டு வாங்க - முன்னாள் வீரர் பேட்டி! 3

“கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளையும் ரிஷப் பன்ட் மிகச் சரியாக சொதப்புகிறார். டி20 உலக கோப்பையில் தினேஷ் கார்த்திக் வெளியில் அமர்த்தப்பட்டு இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்ட போது அதை சரியாக பயன்படுத்தி இருக்க வேண்டும்.

குறிப்பாக செமி-பைனல் போட்டியில் அரிய வாய்ப்பு கிடைத்தது. அதை அரைசதமாகவோ அல்லது இவரது திறமைக்கு சதமாகவோ மாற்றி இருந்தால் எவ்வளவு பெரிய பெயரை பெற்றிருக்கலாம். தனது கிரிக்கெட் வாழ்க்கையே மாறியிருக்கும். அது ரிஷப் பண்ட்டிற்கு புரியவில்லை.

கில், பண்ட்

அவருக்கு இன்னும் மனதளவில் பயிற்சி தேவை. இதன் காரணமாக அவரை வெளியில் அமர்த்தி விட்டு, சில காலம் காத்திருங்கள் என்று பிசிசிஐ அறிவுறுத்த வேண்டும். ரிஷப் பண்ட்டை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பிசிசிஐக்கும் அணி நிர்வாகத்திற்கும் தெரியவில்லை. குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் வெளியில் அமர்த்தி புரிய வைக்க வேண்டும்.

ஏன் தொடர்ந்து இவருக்கு மட்டுமே பல வாய்ப்புகள் கொடுத்து வருகிறது என்று எனக்கு புரியவில்லை. வாய்ப்பிற்காக சஞ்சு சாம்சன் பல வருடங்களாக காத்திருக்கின்றார். அதை பார்த்தாவது இவருக்கு புரிய வேண்டும் அல்லவா?.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *