சபாஷ் அகமது

சபாஷ் அகமது வின் திறமை இந்திய அணியில் இன்னும் யாருக்கும் புரியவில்லை என்று இளம் வீரருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் ராபின் உத்தப்பா.

டி20 உலக கோப்பை தொடர் சூப்பர் 12 சுற்றை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடைந்து விடும்.

அதற்கு அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து வங்கதேச அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்திய அணி

தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, இவ்விரு தொடர்களுக்கான இந்திய வீரர்களின் பட்டியலை வெளியிட்டார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

நியூசிலாந்து தொடரில் ஒருநாள் போட்டிகளுக்கு ஷிகர் தவான் தலைமை வைக்கிறார். டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா தலைமை வைக்கிறார்.

சபாஷ் அகமது

நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இளம் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சபாஷ் அகமது இடம்பெற்று இருக்கிறார். தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் நன்றாக அவர் செயல்பட்டதால் இன்னொரு வாய்ப்பாக நியூசிலாந்து தொடரில் அவருக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சபாஷ் அகமது எப்படிப்பட்ட வீரர்? மற்றும் அவர் இந்திய அணியில் வரும் காலங்களில் எப்படி செயல்படுவார்? என தனது கணிப்பினையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா.

சபாஷ் அகமது

“சபாஷ் அகமது, அவருக்கு இருக்கும் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காத ஒரு வீரராக இருக்கிறார். தனது திறமை மீது முழு நம்பிக்கை கொண்டு அதை செயல்பாடாக மாற்றி நன்றாக வெளிப்படுத்தி வரும் வீரர்களில் ஒருவராகவும் அவர் இருக்கிறார். தனது ஆட்டத்தின் போது, மிகப்பெரிய வீரர் என்ற பயம் இல்லாமல் இயல்பான பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு போராடக்கூடிய ஒரு வீரர். ஆனால் தனது திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறார். எப்போதும் நான் அவருக்கு எதிராக விளையாடும் பொழுது, ஏதேனும் புதிதாக செய்வார். இன்று என்ன செய்யப்போகிறார்? என எண்ணிக் கொண்டே இருப்பேன்.

சந்தேகத்திற்கு இடம் இன்றி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவருக்கு பிளேயிங் லெவலில் இடம் கிடைத்தால், தாக்கத்தை ஏற்படுத்தி காட்டுவார். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் மட்டுமல்லாது, ஃபீல்டிங்கிலும் அசத்தக்கூடியவர். அக்சர் பட்டேல் மற்றும் ஜடேஜாவை போன்று இவரும் இந்திய அணியில் வலம் வருவார். ஆர் சி பி-க்கு தொடர்ந்து முன்னணி வீரராகவும் இவர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *