அனைவரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறுகின்றனர், ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரர் சந்தீப் பட்டேல், அவரது அணியில் கூட விராட் சிறந்தவர் இல்லை என கூறுகிறார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் சந்தீப் பட்டேல், விராட் கோலி சிறந்த வீரர் தான் என்று ஒப்புக்கொண்டார் ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என்று வரும் போது அவர் ரோஹித் ஷர்மாவுக்கு பின்னாடி தான் இருக்கிறார் என்று கூறுகிறார்.

“விராட் கோலி ரசிகர்கள் இது போல் இருக்க மாட்டார்கள், ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என்று வரும் போது அவர் ரோஹித் ஷர்மாவுக்கு பின்னாடி தான் என்று நான் கூறுவேன்,” என சந்தீப் கூறினார்.
“விராட் கோலி தான் சிறந்த வீரர், அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா தான் சிறந்த வீரர்,” என சந்தீப் மேலும் கூறினார்.
விராட் கோலி இல்லாத காரணத்தினால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கேப்டனாக செயல்பட்டார் ரோஹித் சர்மா. ஒருநாள் தொடரில் இரட்டை சதமும், டி20 தொடரில் சதமும் அடித்து அசத்தினார் ரோஹித் சர்மா. அதன் பிறகு தான் இவர்களை பற்றி பேசினார் சந்தீப் பட்டேல்.

Photo by Deepak Malik / BCCI / Sportzpics
2017ஆம் ஆண்டு 21 போட்டிகளில் 1293 ரன் அடித்திருக்கிறார் விராட் கோலி ஆனால் 26 போட்டிகளில் 1460 ரன் அடித்திருக்கிறார் ரோஹித் சர்மா. இதே ஆண்டில், 8 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் கோலி 256 ரன் அடிக்க, 10 போட்டிகளில் 299 ரன் அடித்திருக்கிறார் ரோஹித் சர்மா.
“மீண்டும் கம்பேக் கொடுக்கும் விராட் கோலி, தென்னாப்ரிக்காவிற்கு சென்று சிறப்பாக விளையாடி நிறைய ரன் அடிப்பார். இங்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை பற்றி பேசி வருகிறோம். 2017ஆம் ஆண்டு ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி இருக்கிறார். அனைவரும் அவர் இலங்கைக்கு எதிராக விளையாடினார் என கூறுகிறார்கள், அதே தான் கோலியும். அணி வீரராக விளையாடினாலும், கேப்டனாக விளையாடினாலும் அவர் சிறப்பாக செயல் படுகிறார்,” என அவர் மேலும் கூறினார்.