ஐபில் 2018: மதிப்புமிக்க வீர்களில் தோனியை மிஞ்சினார் அம்பதி ராயுடு.. ஆய்வில் தகவல் 1
BIRMINGHAM, ENGLAND - SEPTEMBER 07: India batsman MS Dhoni (l) and Ambati Rayudu react after the NatWest T20 International between England and India at Edgbaston on September 7, 2014 in Birmingham, England. (Photo by Stu Forster/Getty Images)

நடந்து முடிந்த பதினொன்றாம் ஐபில் சீசனில் இரண்டு வருட தடைக்கு பின்பு மீண்டும் வந்து கோப்பையை தட்டி சென்றது. மற்ற அணிகள் ஏதேனும் ஒரு வீரரை நம்பியிருக்க சென்னை அணியில் மட்டும் ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் ஜொலித்திக்கொண்டுந்தனர். அதில் அனைத்து போட்டிகளிலும் கணிசமாக சென்னை அணிக்கு ரன் குவித்து தந்தவர் ராயுடு. அது மட்டுமில்லாமல் சென்னை அணிக்காக அதிக ரன் குவித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். சீசனில் 5வது அதிக ரன் குவித்த வீரராகவும் உள்ளார்.

ஐபில் 2018: மதிப்புமிக்க வீர்களில் தோனியை மிஞ்சினார் அம்பதி ராயுடு.. ஆய்வில் தகவல் 2

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, இதுவரை இடைநிலை பேட்ஸ்மேனாக கலமிறங்கிக்கொண்டிருந்த ராயுடுவை தொடக்க வீரராக களமிறங்கினார் தோனி. இதற்காக இந்த சீசனின் சிறந்த சிந்தனையளார் விருதும் தோனிக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் 16 போட்டிகளில் 602 ரன்கள் குவித்தார். இதில் 5 அரைசதமும் ஒரு சதமும் அடங்கும்.

ஐபில் 2018: மதிப்புமிக்க வீர்களில் தோனியை மிஞ்சினார் அம்பதி ராயுடு.. ஆய்வில் தகவல் 3

ஹன்ஸா ஆய்வுக்குழு நடத்திய ஆய்வொன்றில், ராயுடு தோனியை விட மதிப்புமிக்க வீரராக இடம் பெற்றுள்ளார்.
இந்தகுழு, சில காரணிகளை வகுத்து அதன் அடிப்படையில் வீரர்களுக்கு புள்ளிகளை அளித்துள்ளது. ஒரு புள்ளிக்கு வீரர்களுக்கு அந்த அணி உரிமையாளர் என்ன பணம் வழங்குகிறார் என்பது பொறுத்தே புள்ளிப்பட்டியல் வரையறுக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, விராட் கோஹ்லி பெங்களூரு அணிக்காக எதிர்பார்த்தது போல இல்லையென்றாலும், சிறப்பாகவே ஆடினார். மேலும் அவர் 430 ரன்கள் 48.18 சராசரியும் கொண்டுள்ளார். அவரை தக்கவைத்து கொண்ட தொகை 17கோடி. இதனடிப்படையில் அவருக்கு வழங்கப்பட்ட புள்ளிகள் 2225. அதாவது ஒரு புள்ளிக்கு கோஹ்லிக்கு வழங்கப்படும் மதிப்பு 76,404 ரூபாய். இதில் கேப்டன்ஷிப் தகுதிக்கு தனி புள்ளிகள் உண்டு.
இதேபோல், தோனியின் கேப்டன்ஷிப், விக்கெட்கீப்பிங், பேட்டிங் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அவருக்கு வழங்க பட்ட புள்ளிகள் 2450. இவரை தக்க வைத்துக்கொள்ள சென்னை அணி 15 கோடி வழங்கியுள்ளது. அம்பதி ராயுடு 2.2 கோடிக்கு மட்டுமே எடுக்கப்பட்டார். ஆனால் அவரின் செயல்பாட்டுக்கு வழங்கப்பட்ட புள்ளிகள் 2734.

ஆய்வின் முடிவில், அம்பதி ராயுடு 16வது இடத்திலும் தோனி விராட் கோஹ்லி 113வது 121வது இடத்தில் உள்ளனர்.

ஐபில் 2018: மதிப்புமிக்க வீர்களில் தோனியை மிஞ்சினார் அம்பதி ராயுடு.. ஆய்வில் தகவல் 4

முதலிடத்தில் டெல்லி டேரிடேவில்ஸ் வீரர் ஹர்ஷத் படேல் 830 புள்ளிகளுடன் உள்ளார். இவருக்கு ஒரு புள்ளிக்கு 860 ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

இரண்டாவதாக, ராஜாஸ்தான் அணிவீரர் ஷ்ரேயாஸ் கோபால் 1151 புள்ளிகளுடன் உள்ளார்.

மிக அதிகவிலை கொடுத்து எடுக்கப்பட்ட ஜெயதேவ் உனட்த்கட் 1088 புள்ளிகள் எடுத்துள்ளார் அவருடைய ஒரு புள்ளிக்கு 1.05லட்சம் கொடுக்கப்பட்டது

Leave a comment

Your email address will not be published.