முதல் டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவான் விளையாட வாய்ப்பு 1

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இடையே வரும் ஜனவரி 5ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி துவங்கிறது. இதற்காக இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் கடினமான வலைபயிற்சி செய்து வருகிறது.

இந்நிலையில், தென்னாபிரிக்கா செல்வதற்கு முன்பே தவானின் கணுக்காலில் காயம் ஏற்பட்டதால், தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் ஆனது. இதனால் தவானுக்கு பதிலாக லோகேஷ் ராகுல் களமிறங்குவார் என கூறினார்கள்.

ஆனால், அவர் மீண்டும் காயத்தில் இருந்து மீண்டு வந்து இந்திய ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி கொடுத்துள்ளார். இந்திய அணி மேலாண்மையில் ஒருவர் ஷிகர் தவான் வலி இல்லாமல், வலைப்பயிற்சியில் ஈடுபட்டார் என கூறினார்.

Cricket, India, Sri Lanka, BCCI, Bhuvneshwar Kumar, Shikhar Dhawan
India’s Shikhar Dhawan gestures towards team’s dressing room as he celebrates scoring a century during the first day’s play of their third cricket test match against Sri Lanka in Pallekele, Sri Lanka, Saturday, Aug. 12, 2017. (AP Photo/Eranga Jayawardena)

“தவான் நன்றாக இருக்கிறார். எந்த வலியும் இல்லாமல், வலைப்பயிற்சியில் ஈடுபட்டு பயிற்சி எடுத்தார். ஆனால், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட போகும் அணியை என்னால் சொல்ல முடியாது. அணியை தேர்வு செய்வது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் கையில் தான் இருக்கிறது,” என தெரிவித்தார்.

ஷிகர் தவான் காயத்தில் இருந்து மீண்டு வந்த மெயிலையும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது.

“காயத்தில் இருந்து மீண்டு வந்த ஷிகர் தவான், முதல் போட்டிக்கான அணி தேர்வு செய்வதில் கலந்து கொள்வார். தென்னாப்ரிக்காவிற்கு செல்வதற்கு முன்பு அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டது,” என எழுதியிருந்தது.

டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி:

வீராட்கோலி (கேப்டன்), சிகர் தவான், முரளி விஜய் ,அஜிங்கியா ரகானே, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, விர்த்திமான் சகா(கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்தர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது‌ ஷமி, லோகேஷ் ராகுல், ஜஸ்ப்பிரிட் பும்ரா, உமேஷ் யாதவ், பர்த்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), செத்தேஸ்வர் புஜாரா, புவனேஸ்வர் குமார்

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *