மைதானத்தில் கெட்ட கெட்ட வார்த்தையில் பேசி சிக்கி கொண்ட விராத் கோஹ்லி
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக செஞ்சூரியனில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய கேப்டன் கோஹ்லி கெட்ட வார்த்தையில் பேசியது, ஸ்டெம்ப் கேமராவில் பதிவாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு மார்கம் 94 ரன்களும், ஹசீம் ஆம்லா 82 ரன்களும் மற்றும் டூ பிளசிஸ் 63 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் தென் ஆப்ரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 335 ரன்களும் எடுத்து ஆல் அவுட்டானது.
இதனையடுத்து இன்று தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு கே. எல் ராகுல் 10 ரன்னிலும், புஜாரா ரன் எதுவும் எடுக்காமலும் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறி ஏமாற்றம் கொடுத்தனர்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த முரளி விஜய் – கேப்டன் கோஹ்லி கூட்டணி சிறிது நேரம் தாக்குபிடித்து நிதானமாக ரன் சேர்த்தது.
இதில் போட்டியின் தேநீர் இடைவேளையின் போது தனது சக வீரர் முரளி விஜயிடம் இந்தி மொழியில் பேசிய விராத் கோஹ்லி இன்று ஒரு நாள் முழுவதும் நாம் தாக்குபிடித்து விட்டோம் என்றால் அவர்களை வச்சு செய்து விடலாம்(If we play until the evening they are F****D) என்று பேசியுள்ளார்.
எதிர்பாராத விதமாக கோஹ்லியின் இந்த பேச்சு ஸ்டெம்பில் வைக்கப்பட்டிருந்த மைக்கில் பதிவாகி அனைவருக்கும் கேட்டுவிட்டது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
https://twitter.com/kumarrr123/status/952526589664702464
ஆனால் இந்த வார்த்தையை சொன்ன அடுத்த சில நிமிடங்களில் விஜய் 46 ரன்கள் எடுத்தபோது விக்கெட்டை இழந்து கோஹ்லியின் சபதத்தை பொய்யாக்கினார், அவரை தொடர்ந்து வந்த ரோஹித் சர்மாவும் 10 ரன்னில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தார்.
கோஹ்லி மட்டும் 106 பந்துகளில் 66 ரன்களை கடந்து தனி ஒருவனாக தொடர்ந்து போராடி வருகிறார்.