தற்போது இலங்கைக்கு சென்று நீண்ட தொடரில் விளையாடி கொண்டிருக்கும் இந்திய அணி முதலில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கியது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி தேநீர் இடைவெளியின் போது 238க்கு 3 விக்கெட்டுகள் இழக்க செதேஸ்வர் புஜாரா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
தனது 50வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் செதேஸ்வர் புஜாரா, 140க்கும் மேல் பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் மலின்டா புஷ்பகுமாரா ஓவரில் ஒரு சிக்சரும் அடித்தார்.
முன்னதாக லோகேஷ் ராகுல் அரைசதம் அடித்து கொண்டாடினார். அதன் பிறகு இந்திய அணியின் மற்றொரு தொடக்கவீரர் ஷிகர் தவானும் அரைசதம் அடித்து அசத்தினார்கள்.
இலங்கை அணி தரப்பில் டில்ருவான் பெரேரா 68 ரன் கொடுத்து 1 விக்கெட் எடுக்க, ரங்கனா ஹெராத் 83 ரன் விட்டு கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.
சுருக்கமாக:
2வது டெஸ்ட்: நாள் 1: இந்தியா – 344/3
செதேஸ்வர் புஜாரா 128*, அஜிங்க்யா ரஹானே 103*
டில்ருவான் பெரேரா 68/1, ரங்கனா ஹெராத் 83/1