தென்னாபிரிக்கா தொடரின் நடுவில் இருந்து மீண்டும் இந்தியாவிற்கு திரும்பவுள்ளார் ஷர்துல் தாகூர். தென் ஆப்பிரிக்கா அணியுடன் விளையாடவுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணியில் இருக்கும் அவர், மீண்டும் இந்தியாவிற்கு வந்து இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளார்.
இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்காக முதன் முறையாக ஷர்துல் தாகூரை இந்திய கிரிக்கெட் வாரியம் அழைத்துள்ளது. 2016 வெஸ்ட் இண்டீஸ் தொடரின் இந்திய அணியில் இடம் பிடித்த வீரர், இந்திய அணிக்காக அறிமுகவாகவில்லை. இந்த தொடரில் உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இல்லாததால், இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுரேஷ் ரெய்னா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ் ஆகியோருடன் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் பேக்-அப் வீரர்கள் பட்டியலில் இருந்தார் ஷர்துல் தாகூர்.
இவர் மட்டும் இல்லாமல், ஜூனியர் இந்திய அணியில் இருந்து யுஸ்வேந்த்ர சஹாலும் இந்திய அணியில் இடம் பிடித்தார். இலங்கையுடன் மோது 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்னரே இலங்கைக்கு வந்தார் அக்சர் பட்டேல், ஆனால் அவர் விளையாடவில்லை. குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கிடைத்தது.
இதுமட்டும் இல்லாமல், அணியில் பல மாற்றங்களை செய்துள்ளார்கள். யுவராஜ் சிங்கு ஓய்வு அளிக்க, தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்டை வெளியே அனுப்பினார்கள். துணை கேப்டனாக ரோகித் ஷர்மாவை நியமித்தார்கள். ஒருவேளை, விராட் கோலி ஓய்வு எடுத்தால், அவருக்கு பதிலாக கேப்டன் பதவியை ரோகித் ஷர்மா ஏற்பார்.