தற்போது இங்கிலாந்தில் மினி உலக கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. இதில், ஜூன் 8ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஏஞ்சலோ மத்தியூஸ் பந்துவீச முடிவு செய்தார். முதலில் களமிறங்கிய தவான் மற்றும் ரோகித், தொடக்கத்தில் பொறுமையாக ஆடினார்.
78 ரன்னில் இருக்கும்போது ரோகித் பெவிலியன் செல்ல, அவருக்கு பிறகு டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார் கேப்டன் விராட் கோலி. அடுத்து வந்த யுவராஜ் சிங்கும் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்.
விக்கெட்டுகள் சரிந்தாலும், மனம் தளராமல் சதம் அடித்தார் ஷிகர் தோனி. பாகிஸ்தானுடன் விளையாடிய போட்டியிலும் அரைசதம் அடித்தார் ஷிகர் தவான்.
அந்த சதம் அவருடைய ஒருநாள் வாழ்க்கையில் 10வது சதம் ஆகும். அவரது 77வது இன்னிங்சில் 10வது ஒருநாள் சதம் அடித்தார். இந்திய அணியின் கேப்டன் அவரது 10வது ஒருநாள் சதத்தை அவரது 80வது இன்னிங்ஸ் அடித்தார். இதன் மூலம் குறைவான இன்னிங்சில் 10 ஒருநாள் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ஷிகர் தவான்.
இந்த சதத்தின் போது சாம்பியன்ஸ் டிராபியில் அவர் 500 ரன் கடந்தார். அவரது 7வது இன்னிங்சின் போது சாம்பியன்ஸ் டிராபியில் 500 ரன் அடித்தார். இதன் மூலம், சாம்பியன்ஸ் டிராபியில் வேகமாக 500 ரன் அடித்த வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரரானார் தவான்.