முதல் டி20ல் எந்த இரண்டு பேர் ஓபனிங் செய்வார்கள்? பிரித்வி ஷா நிலை என்ன? என்பன குறித்து ஹர்திக் பாண்டியா பேட்டியளித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றி விட்டது. தொடர்ந்து இரு அணிகளும் டி20 தொடரில் மோதவிருக்கின்றன.
வருகிற ஜனவரி 27, 29 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் ராஞ்சி, லக்னோ மற்றும் அகமதாபாத் மைதானங்களில் மூன்று டி20 போட்டிகளும் நடைபெற உள்ளது. உள்ளூர் போட்டிகளில் அபாரமாக விளையாடிய பிரித்வி ஷா, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்குள் இடம் பெற்றிருக்கிறார்.
இந்திய அணியில் துவக்க வீரர்களாக கில் மற்றும் இஷான் கிஷன் இருவரும் இருக்கின்றனர். பிரித்வி ஷாவும் துவக்க வீரராக களமிறங்கக்கூடியவர். சிறந்த ஃபார்மிலும் இருக்கிறார். ஆகையால் நேரடியாக பிளேயிங் லெவனில் பிரித்வி ஷா இருப்பாரா? இல்லை ஈசான் கிஷன் மற்றும், சுப்மன் கில் இஷான் கிஷனுடன் ஓபனிங் செய்வாரா? என்கிற கேள்விகள் ஹர்திக் பாண்டியாவின் முன்பு வைக்கப்பட்டது.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட ஹர்திக் பாண்டியா, இதற்கு தெளிவாக பதில் கொடுத்திருக்கிறார். “ஒருநாள் போட்டிகளில் கில் மிகச் சிறப்பாக விளையாடி விளையாடினார். டி20 அணியில் இருக்கும் அவரை, எப்படி வெளியில் அமர்த்துவது?. இதற்கு பெரிதாக யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. நிச்சயமாக துவக்க வீரராக களமிறங்குவார்.”
மேலும், “துரதிஷ்டவசமாக சஞ்சு சாம்சன் காயம் அடைந்ததால் ஜித்தேஷ் சர்மாவிற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உள்ளூர் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடியதன் பரிசாக இந்த வாய்ப்பு அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ராஞ்சி மைதானம் குறித்து திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது ல். அந்த திட்டத்திற்கு ஜித்தேஷ் சர்மா சரி வருவாரா? என்பதை மைதானத்தில் தான் நீங்கள் பார்க்க வேண்டும்.
நியூசிலாந்து அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறந்த அணி. இந்தியாவிற்கு சவாலாக இருப்பார்கள். அவர்களை வீழ்த்த வேண்டும் என்றால் அவர்களை விட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.” என்றார்.