ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கும், கிரிக்கெட் வீரர்களின் சங்கத்திற்கும் இடையே ஊதியம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. நாங்கள் கேட்கும் ஊதியம் கிடைக்கும் வரை போராடுவோம். ஆஷஸ் தொடரைக்கூட புறக்கணிக்கலாம் என்று துணை கேப்டன் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தம் வரும் 30-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் 1-ந்தேதியில் இருந்து புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும். வீரர்கள் ஒப்பந்தத்திற்கு ஒத்துழைக்காததால், 6 மாதம் தடையை சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஹோவார்ட் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய வீரர்கள் (ஒப்பந்தத்தில் ஈடுபடாத வீரர்கள் உள்பட) ஐ.சி.சி. ஒப்புதலுடன் நடைபெறும் வெளிநாட்டு கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் டி20 கிரிக்கெட் லீக்கில் விளையாட முடியாது. அதில் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி கட்டாயம் தேவை. அதேபோல் காட்சி கிரிக்கெட்டிலும் விளையாட 6 மாதத்திற்கு அனுமதி வழங்க இயலாது.
ஜூன் 30-ந்தேதியுடன் வீரர்களின் ஒப்பந்தம் முடிவடைகிறது. அதன்பின் அவர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஊழியர்கள் கிடையாது’’ என்றார்.
“ஐசிசி ஒப்புதல் அளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அனுமதிக்காமல் விளையாட முடியாது, அதாவது உள்நாட்டு டி20 போட்டிகளில் விலையடா கூடாது. ஐசிசி ஒப்புதல் அளிக்காத கிரிக்கெட்டில் விளையாடினாள், ஐசிசி ஒப்புதல் அளித்த கிரிக்கெட் போட்டிகளில் 6 மாதங்களுக்கு தடை விதிக்கப்படும்,” என ஹோவர்ட் எழுதியுள்ளார்.
“ஜூன் 30-வுடன் உங்களுடைய ஒப்பந்தம் முடிந்து விட்டால், அதற்கு பிறகு நீங்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் இருக்க கூடாது. அதாவது, அதற்கு பிறகு நீங்கள் விளையாட வேண்டியதில்லை, பயிற்சி அளிக்க தேவை இல்லை, ஆனால் நீங்கள் மேலும் அதை செய்தால், அதற்கான சம்பளத்தை உங்களுக்கு வழங்க படாது,” என மேலும் அவர் எழுதியிருந்தார்.