Cricket, India, Day Night Test, Sourav Ganguly, BCCI

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார். முதலில் 126 பந்துகளில் 116 ரன்கள் குவித்திருந்த ரோஹித், கடைசி 27 பந்துகளில் 92 ரன்கள் (11 சிக்ஸ், 3 பவுண்டரி) குவித்தார். இது ரோஹித் சர்மாவின் 3-வது இரட்டைச் சதம்.

ரோகித் சர்மா மற்றும் கோலி இருவரில் யார் பெஸ்ட் : சொல்கிறார் கங்குலி 1

ஒருநாள் போட்டியின் சரித்திரத்தில் இதுவரை எந்தவொரு வீரரும் 3 இரட்டைச் சதங்களை எடுத்ததில்லை.

ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதங்கள்

ரோஹித் சர்மா – 3

இதர 2398 வீரர்களில் கிடைத்த இரட்டைச் சதங்கள் – 4

இந்நிலையில் ரோகித் சர்மாவின் இந்த ஆட்டதைப் பற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கூறியுள்ளார், ரோகித் தொடர்ந்து பெரிய ஸ்கோர்களை அடிக்கும் திறம் உடையவர் எனப் பாராட்டியுள்ளார். நான் எப்போதும் இதை தான் கூறிகிறேன், ரோகித் சர்மா ஒரு துவம்சம் செய்யும் பேட்ஸ்மேன். அவர் ஒரு மேட்ச் வின்னர்.ரோகித் சர்மா மற்றும் கோலி இருவரில் யார் பெஸ்ட் : சொல்கிறார் கங்குலி 2

சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக ஸ்கோர்

ரோஹித் சர்மா 264

மார்ட்டின் குப்தில் 237*
விரேந்தர் சேவாக் 219
கிறிஸ் கெயில் 215
ரோஹித் சர்மா 209
ரோஹித் சர்மா 208*
சச்சின் டெண்டுல்கர் 200*

ரோகித் சர்மா மற்றும் கோலி இருவரில் யார் பெஸ்ட் : சொல்கிறார் கங்குலி 3

ஒரு வழியாக அவருடைய பேட்டிங் பசியை ரன்னாக மாற்ற எப்போதும் கற்றுக்கொண்டுர் இருக்கிறார். சதத்தை எப்போதும் எளிதாக இரட்டை சதமாக மாற்ற கடந்த 10 மாதங்களாக முயற்சி செய்து பெரிய ஸ்கோர் அடிக்கிறார்.

ரோகித் சர்மா மற்றும் கோலி இருவரில் யார் பெஸ்ட் : சொல்கிறார் கங்குலி 4

இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் அவர் அடித்த அனைத்து இரட்டை சதங்களுமே மிக மிக முக்கியமான போட்டிகளாகும். எப்படி பார்த்தாலும் அவருடைய இரட்டை சதம் தன என் கண் முன்னர் நிற்கிறது. அவ்வளவு அற்புதமாக அடிக்கிறார் ரோகித்.

ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்திக்கொண்டிருக்க, இந்திய கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டைச் சதங்கள் எடுத்து அசத்தி வருகிறார். ரோகித் சர்மா மற்றும் கோலி இருவரில் யார் பெஸ்ட் : சொல்கிறார் கங்குலி 5

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரு இரட்டைச் சதங்கள் உள்ளிட்ட மூன்று சதங்களுடன் 610 ரன்கள் எடுத்தார் கோலி. கடைசி டெஸ்டில் தனது 6-வது இரட்டைச் சதத்தை எட்டினார். அதனை அவர் 238 பந்துகளில் 20 பவுண்டரிகளுடன் விளாசியிருந்தார். இதன்மூலம் அவர் பல சாதனைகளைப் படைத்தார்.

* சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 இரட்டைச் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையை அவர் அடைந்தார். இந்தச் சாதனையை தனது 63-ஆவது டெஸ்ட் போட்டியில் எட்டினார் கோலி. இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் பிரையன் லாராவின் சாதனையை அவர் தகர்த்தார். முன்னதாக, பிரையன் லாரா ஒரு கேப்டனாக 5 இரட்டைச் சதம் விளாசியிருந்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அடித்து முதல் இரட்டை சதம் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையே மாற்றி விட்டது. அவதும் ஒரு பேட்ஸ்மேனாக ருத்ர தாண்டவம் எடுத்துவிட்டார். முதல் இரட்டை சதம் எடுக்கும் போதே, அந்த ஒரு திறம் நம்மிடம் இருக்கிறது என்ற நம்பிக்கை அவருக்கு வந்துவிட்டது. இன்னொரு முறை நம்மால் செய்ய முடியும் என்ற ஒரு நம்பிக்கை அவருக்குள் வந்துவிட்டது.Cricket, India, Australia, Rohit Sharma

கடந்த ஐந்து வருடங்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஸ்கோர் எடுத்த இந்தியர்

2013 – ரோஹித் சர்மா 209
2014 – ரோஹித் சர்மா 264
2015 – ரோஹித் சர்மா 150
2016 – ரோஹித் சர்மா 171*
2017 – ரோஹித் சர்மா 208*

டெஸ்ட் போட்டியில் கோலி

2011 – 2015: 41 டெஸ்டுகள், 72 இன்னிங்ஸ், இரட்டைச் சதங்கள் எதுவுமில்லை

2016 முதல் – 22 டெஸ்டுகள், 33 இன்னிங்ஸ், ஆறு இரட்டைச் சதங்கள்

நாம் விராட் கோலியை பற்றி தான் மிக அதிகமாகி பேசுகிறோம். ஆனால், ரோகித் சர்மாவை பாருங்கள், 2015ல் இருந்து வெறும் 50 ஆட்டத்திலேயே 11 சதங்கள் அடித்துள்ளார். அவருக்கு முன்னர் மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறார். சொல்லப் போனால் இவர் தான் பெஸ்ட் போல தெரிகிறது.

ரோகித் சர்மா மற்றும் கோலி இருவரில் யார் பெஸ்ட் : சொல்கிறார் கங்குலி 6

* சர்வதேச அளவில் அதிக இரட்டைச் சதம் அடித்த வீரர்கள் வரிசையில் விராட் கோலி 6-ஆவது இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் (12 இரட்டைச் சதங்கள்) உள்ளார். இலங்கையின் குமார் சங்ககாரா (11), மேற்கிந்தியத் தீவுகளின் பிரையன் லாரா (9), இங்கிலாந்தின் வேலி ஹமோத் (7), இலங்கையின் மகிலா ஜெயவர்தனே (7) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

டெஸ்டில் இரட்டைச் சதங்கள் எடுத்த கேப்டன்கள் (ஜூலை 2016-க்குப் பிறகு)

கோலி – 6
இதர கேப்டன்கள் – 0

இரட்டைச் சதங்கள் எடுத்த இந்திய கேப்டன்கள்

1932 – 2015 – 4 (பட்டோடி, கவாஸ்கர், டெண்டுல்கர், தோனி)
2016 முதல் – 6 (அனைத்தும் கோலி எடுத்தவை)

நாம் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் முதல் டெஸ்ட் ஆடும் போது, ரோகித் இறங்கு துவம்சம் செய்யப் போகிறார். இது நடக்கும் என நம்புவோம். அவருடைய டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் திறமையில் யாருக்கும் சந்தேகம் இல்லை. எனக் கூறினார் கங்குலி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *