இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவரது சொந்த வேலைகளுக்காக ஓய்வு எடுத்துள்ளார், இதனால் அவரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மீண்டும் அணியில் பார்க்க ஆவலோடு இருக்கிறார்கள்.
டிசம்பர் 11ஆம் தேதி இத்தாலியில் உள்ள 800 வருட மாளிகையில் விராட் கோலி அவருடைய நீண்டநாள் காதலி அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண போட்டோக்கள் இணையதளத்தில் பரவிய உடன் அவரின் ரசிகர்கள் சந்தோசத்தில் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தார்கள்.

விராட் கோலி இல்லாத காரணத்தினால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கேப்டனாக செயல் பட்ட ரோஹித் சர்மா இரண்டு தொடர்களையும் வென்று அசத்தினார். ஒருநாள் தொடரில் தனது மூன்றாவது இரட்டைசதம் அடித்த ரோகித் சர்மா, டி20 தொடரின் போது அவரின் இரண்டாவது டி20 சதம் அடித்து அசத்தினார்.

Photo by Deepak Malik / BCCI / Sportzpics
இவர்களது திருமண வரவேற்பு வரும் 26ஆம் தேதி மும்பையில் நடக்கிறது. ஆனால், இந்த திருமண வரவேற்பில் இலங்கை அணி வீரர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். 24ஆம் தேதி மூன்றாவது டி20 போட்டி முடிந்தவுடனே, இலங்கைக்கு திரும்புவதாக தெரிவித்தனர்.

வங்கதேச தொடருக்கு இலங்கை அணி 24 வீரர்களை தேர்வு செய்துள்ளது. இலங்கை, வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் கலந்துகொள்ளும் முத்தரப்பு தொடரில் 15 வீரர் இலங்கையில் இருந்து செல்வார்கள். மீதம் உள்ள வீரர்கள் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பயிற்சி எடுப்பார்கள்.

வங்கதேசத்துடன் டெஸ்ட் தொடர் முடிந்தவுடன், இலங்கை அணி டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.