எதிர்பார்ப்பு :
வரும் 20ஆம் தேதி துவங்கவுள்ள இலங்கை உடனான ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி பல இளம் வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் கலவையாக உள்ளது. மேலும் அணி சமவிகிதமாக இருக்கிறது. 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பலரும் எதிர்பார்ட்த்த அணியாக அமையவில்லை என்பதே உண்மை.
முன்னர் நடந்த ஒரு நாள் தொடரில் இருந்த யுவராஜ் சிங், முகமது சமி, ரவிந்திர ஜடேஜா, ரவி அஸ்வின், உமேஷ் யாதவ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்றாக மனீஷ் பாண்டே, ஷ்ரடுல் தகுர், யுஜவேந்திர சகால், அக்சர் படேல், கே எல் ராகுல் அணியில் சேர்க்கபப்ட்டுள்ளனர். அஷ்வின் மற்றும் ஜடேஜாவிற்க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏமாற்றம் :
ஆனால் நன்றாக அனைத்து போட்டிகளிலும் செயல்பட்டும் இன்னும் அணியில் இடம் கிடைக்காமல் இருக்கும் சில வீரர்களும் உள்ளனர். அவர்களை காண்போம்.
1. ரிஷப் பாண்ட்
19 வயதே ஆன இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். இவர் தன்னுடைய டி20 அறிமுக போட்டியை கடந்த ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக இந்தியாவில் நடந்த போட்டியில் ஆடினார். அதற்கு பின்பு மேற்கிந்திய தீவுகள் உடன் ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே ஆட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இன்னும் சில வாய்ப்புகள் இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம்.
மேலும் இவர் சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்க ஏ அணியுடனான போட்டியில் சரியாக செயல்படாததால் அவருக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இவர் கடந்த கோப்பை தொடரில் அபாரமாக ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்க்காகவே இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்களாம்.
கடந்த ரஞ்சி கோப்பையில் 8 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 972 ரன்களை குவித்துள்ளார். அதில் 4 சதங்களும் 2 அரை சதங்களும் அடங்கும்.