இலங்கை vs இந்தியா: மீதம் உள்ள இரண்டு போட்டிகளில் 3 மாற்றங்கள் ஏற்படலாம்

தற்போது இந்திய அணி இலங்கையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் வென்ற இந்திய அணி, இந்த தொடரையும் வென்றது.

இந்த தொடரில் ஒரு முறை கூட தோல்வி பெறாத இந்திய அணி, அடுத்த இரண்டு ஒருநாள் போட்டியும் வென்று, இலங்கை அணியை வைட்வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் மூன்று போட்டிகளில் விளையாடாத இந்திய அணி வீரர்கள், மீதம் உள்ள இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பு உள்ளது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில், இந்தியாவின் நடுவரிசை வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. லோகேஷ் ராகுல் மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோர் இலங்கை அணிக்கு எதிராக திணறுகிறார்கள். இதனால், அடுத்த போட்டிகளில் அவர்களை வெளியே உட்கார வைக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த தொடரை ஏற்கனவே வென்றுவிட்டதால், அடுத்த போட்டியில் அணியில் மாற்றம் இருக்கும் என விராட் கோலி தெரிவித்தார். அணியில் எந்த மாற்றங்கள் நடக்கலாம் என்று இப்போது பார்க்கலாம்:

கேதார் ஜாதவுக்கு பதிலாக மனிஷ் பாண்டே

இந்திய அணிக்கு விளையாட பல நாட்களாக மனிஷ் பாண்டே காத்து கொண்டிருக்கிறார். சிறப்பாக விளையாடுவதால், அவர் இலங்கை தொடரில் இடம் பிடித்தார். அவருடன் ஒப்பிடும் போது, கேதார் ஜாதவ் சிறப்பாக பந்து வீசுவதால், அவர் அணியில் இருக்கிறார்.

ஆனால், இந்த தொடரில் பேட்டிங் சிறப்பாக விளையாட கேதார் ஜாதவுக்கு பதிலாக மனிஷ் பாண்டே அணியில் விளையாட வாய்ப்புகள் உள்ளது.

சஹாலுக்கு பதிலாக குல்தீப் யாதவ்

ஆஸ்திரேலியா தொடரின் பிறகு குல்தீப் யாதவ் சிறப்பாக விளையாடுகிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு அவர் அணியில் இல்லாதது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த தொடரில் சொல்லிக்கொள்ளும் விளையாடாத யுஸ்வேந்த்ர சஹால், மீதம் உள்ள இரண்டு போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் தான். இவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுலுக்கு பதிலாக அஜிங்க்யா ரஹானே

டெஸ்ட் போட்டிகளில் இடம் பிடித்த ராகுல் மற்றும் ரஹானே, ஒருநாள் போட்டிகளில் இடம் பிடிக்க கஷ்டப்படுகிறார்கள்.

அதிரடியாக விளையாடும் ராகுலுக்கு ஒருநாள் தொடரில் இடம் கிடைத்தது. ஆனால், முதல் இரண்டு போட்டிகளில் ஒழுங்காக விளையாததால், ரஹானேவை ஏன் சேர்க்கவில்லை என கேள்விகள் எழுகிறது.

ஒருநாள் போட்டிகளில் நன்றாக விளையாடும் ரஹானே, இடத்தில் நிரந்தரமாக இருப்பதில்லை. எனினும், அடுத்த போட்டிகளில் ராகுலுக்கு பதிலாக ரஹானே களமிறங்குவார் என்று எதிர்பார்க்க படுகிறது.

 

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.