ஜிம்பாப்வேயிடம் மண்ணை கவ்விய இலங்கை கிரிக்கெட் அணி… இந்திய ரசிகர்கள் ஆறுதல்
இலங்கை அணிக்கு எதிரான முத்தரப்பு தொடரின் லீக் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள ஜிம்பாப்வே அணி, உலக கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
வங்கதேச தலைநகரான டாக்காவில் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணியேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணி வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், ஜிம்பாப்வே இலங்கை இடையேயான லீக் போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, கத்துக்குட்டியான ஜிம்பாப்வேவை எளிதில் சுருட்டி விட்டு சிரமம் இல்லாமல் வெற்றி பெற்று கொள்ளலாம் என்று நினைத்ததோ என்னவோ தெரியவில்லை, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியின் மசகாட்சா மற்றும் ராசா இலங்கையின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்ததன் மளமளவென ரன் குவித்து, மசகாட்சா 73, சிக்கந்தர் ராசா 81 ரன்கள் எடுத்து கைகொடுத்தன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி, 290 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து சரி பவுலிங்கில் தான் சொதப்பி பேட்டிங்கில், ஒரு கை பார்த்துவிடலாம் என்ற வீராப்பில் களமிறங்கிய இலங்கை அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான பெரேரா 80 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தார். அடுத்து வந்த மேத்யூஸ்(42), சண்டிமால்(32) மற்றும் பெரேரா(64) உள்ளிட்ட இலங்கை அணிக்கு கைகொடுத்தாலும் மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியதால், இலங்கை அணி 48வது ஓவரில் 9 விக்கெட்டுள் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்து இக்கட்டான நிலையில் மாட்டிக்கொண்டது.
இலங்கை அணியின் வெற்றிக்கு 12 பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் 49வது ஓவரின் முதல் பந்தை எதிர்க்கொண்ட சமீரா (1) சதாரா பந்தில் அவுட்டாக இலங்கை அணி 48.1 ஓவரில் 278 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்திய அணி எந்த அணியிடம் தோல்வியடைந்தாலும், இந்திய ரசிகர்களையும், இந்திய அணியையும் கடுமையாக கலாய்க்கும் ரசிகர்கள், நேற்று தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட்டில் இந்திய அணி தோல்வியடைந்ததையும் சமூக வலைதளங்களில் கொண்டாடினர், இந்திய ரசிகர்களை கிண்டலக்கவும் செய்தனர்.
ஆனால் அதே நாளில் கத்துக்குட்டியான ஜிம்பாப்வேயிடம் தங்கள் அணி தோல்வியடைந்து விட்டதால், வேறு வழியின்றி கப் சிப் என்றாகியுள்ளனர். இந்திய ரசிகர்களும் இதனால் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.