சர்வதேச கிரிக்கெட்டில் 2017-ஆம் ஆண்டில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஐந்து முறை டக் அவுட் ஆகியுள்ளார். இதனால், ஒரே வருடத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆன இந்திய கேப்டன்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் 1983 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் ஐந்து முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (16-ந் தேதி) தொடங்கியது.
கொல்கத்தாவில் கனமழை பெய்து வந்ததால், முதல் போட்டியின் முதல் தாமதமாக தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாமல் வீசிய முதல் ஓவர் முதல் பந்தை எதிர்கொண்ட இந்திய அணியின் நட்சத்திர வீரர் லோகேஷ் ராகுல், முதல் பந்திலேயே பெவிலியன் திரும்பினார்.
அதன் பிறகு வந்த புஜாரா பொறுமையாக விளையாடி கொண்டிருந்தாலும், இன்னொரு தொடக்க வீரரையும் இழந்தது இந்திய அணி. ஏழாவது ஓவரில் லக்மல் ஓவரில் கிளீன் போல்ட் ஆனார் தவான். அடுத்து வந்த விராட் கோலி பொறுமையாக விளையாடி ரன்னை அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த போது, மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்த பட்டது. மீண்டும் போட்டி தொடங்கியது டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார் விராட் கோலி.
இதனால், ஒரே வருடத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆன இந்திய கேப்டன்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் 1983 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் ஐந்து முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
1976இல் பிஷான் பேடி 4 முறை டக் அவுட் ஆக, 2001 மற்றும் 2002 இல் 4 முறை சவுரவ் கங்குலி டக் அவுட் ஆக, 2011இல் நான்கு முறை டக் அவுட் ஆகியுள்ளார் மகேந்திர சிங் தோனி. இன்னும் இந்த வருடத்தில் இலங்கை அணியுடன் மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதனால், 2017-இல் இன்னும் ஒரு முறை டக் அவுட் ஆனால் கூட, இது கோலிக்கு தேவையற்ற ஒரு சாதனையாக அமையும்.