இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா, ஒரே இன்னிங்சில் 7 சிக்ஸர் அடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை தட்டி சென்றுள்ளார்.
அதிரடியாக விளையாடும் இந்திய அணியின் ஹர்டிக் பாண்டியா, இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை செய்தார்.
தன் அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களை நசுக்கி தன் முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார் ஹர்டிக் பாண்டியா.
1994 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக நவஜோட் சிங் சித்து 8 சிக்ஸர் விளாசினார். ஒரே இன்னிங்சில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் அவர் தான்.
அதற்கு அடுத்தபடியாக இந்த பட்டியலில் விரேந்தர் சேவாகுடன் ஹர்டிக் பாண்டியா உள்ளார். அதுமட்டும் இல்லாமல், ஒரே ஓவரில் 26 ரன் விளாசினார் ஹார்டிக் பாண்டியா.
முன்னாள் இந்திய வீரர் விரேந்தர் சேவாக் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் இதற்கு முன்பு ஒரே இன்னிங்சில் 7 சிக்ஸர்களை விளாசியுள்ளார்கள்.
தொடக்கத்தில் பொறுமையாக விளையாட தொடங்கிய பாண்டியா, பொறுமையை கட்டுப்படுத்த முடியாமல் அதிரடி ஆட்டத்தை விளையாடி இந்திய அணி 487 ரன் எடுக்க உதவி செய்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரே இன்னிங்சில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர்களின் பட்டியல்:
1. நவஜோட் சிங் சித்து – 8 சிக்ஸர்
2. விரேந்தர் சேவாக் – 7 சிக்ஸர்
3. ஹர்பஜன் சிங் – 7 சிக்ஸர்
4. ஹர்டிக் பாண்டியா – 7 சிக்ஸர்
5. ரவி சாஸ்திரி – 6 சிக்ஸர்