Cricket, Ashes, England, Australia, Shane Warne

சமகால கிரிக்கெட்டில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சிறந்த பேட்ஸ்மென்கள், ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியைக் கடந்து விட்டார் ஸ்மித் என்கிறார் ஷேன் வார்ன்.

ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு எழுதிய பத்தியில் அவர் சிறந்த பேட்ஸ்மென்களை பட்டியலிட்டுள்ளார்.

இந்தப் பட்டியலில் ஸ்மித்துடன் 10-வது இடத்தை விராட் கோலி பகிர்கிறார்.

Cricket, India, Sri Lanka, Virat Kohli
Virat Kohli captain of India raises his bat after scoring 50 runs during day one of the 3rd test match between India and Sri Lanka held at the Feroz Shah Kotla Stadium in Delhi on the 2nd December 2017 Photo by Deepak Malik / BCCI / Sportzpics

“என்னைப் பொறுத்தவரை ஸ்டீவ் ஸ்மித் உலகின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மென், விராட் கோலி அனைத்து வடிவங்களிலும் சிறந்த வீரர், ஆனால் 5 நாட்கள் ஆடும் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தான் சிறந்த வீரர்” என்று எழுதியுள்ளார்.

2014-ல் விராட் கோலி இங்கிலாந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் தொடர்ந்து எட்ஜ் ஆகி வெளியேறியதை வார்ன் கோலி ஏன் ஸ்மித்தை விட கொஞ்சம் கீழே உள்ளார் என்பதற்குக் காரணம் காட்டியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியை விட ஸ்மித்துக்கு உயர்விடம் அளிக்கும் ஷேன் வார்ன் 1
PERTH, AUSTRALIA – DECEMBER 16: Steve Smith of Australia celebrates after reaching his century during day three of the Third Test match during the 2017/18 Ashes Series between Australia and England at WACA on December 16, 2017 in Perth, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

“என்னைப் பொறுத்தவரையில் 3 முக்கிய நாடுகளில் கிரேட் பேட்ஸ்மென்கள் சதம் அடிக்க வேண்டும், இங்கிலாந்தில், அந்த டியூக் பந்துகளில் ஸ்விங் ஆகும் நிலைமைகளில் அடிக்க வேண்டும், ஆஸ்திரேலிய வேகப்பந்து, பவுன்ஸ் ஆட்டக்களங்களில் ஆட வேண்டும், அதே போல் இந்தியாவின் தூசித் தும்பட்டை பிட்ச்களில் பந்துகள் ஸ்பின் ஆகி எழும்பும், இங்கும் ரன்கள் அடிக்க வேண்டும்.

கோலியின் சுயவிவரப் பட்டியலில், இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் அவர் சரியாக ஆடவில்லை. ஆனால் தன்னுடைய இரட்டைச் சத மேஜிக்கை அடுத்த ஆண்டு இங்கிலாந்துக்குச் செல்லும் போது கொண்டு செல்வார் என்றெ கருதுகிறேன், ஆக்ரோஷ வீரர் மீது இந்த அழுத்தம் உள்ளது” என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியை விட ஸ்மித்துக்கு உயர்விடம் அளிக்கும் ஷேன் வார்ன் 2
Virat Kohli captain of India raises his bat after scoring 100runs during day one of the 3rd test match between India and Sri Lanka held at the Feroz Shah Kotla Stadium in Delhi on the 2nd December 2017 Photo by Deepak Malik / BCCI / Sportzpics

விவ் ரிச்சர்ட்ஸ் முதலிடத்திலும் பிரையன் லாரா 2-ம் இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 3-ம் இடத்திலும் உள்ளனர். அடுத்த 3 இடங்கலில் கிரெக் சாப்பல், ரிக்கி பாண்டிங், ஆலன் பார்டர் உள்ளனர். ஜாக் காலிஸ் மற்றும் டிவிலியர்ஸ் 7 மற்றும் 9-ம் இடங்களில் உள்ளனர். இதில் ஒரே இங்கிலாந்து வீரராக கிரஹாம் கூச் 8-ம் இடத்தில் உள்ளார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *