2023 உலககோப்பை இந்திய அணியில் இவருக்கு நிச்சயம் இடம்கிடைக்கும் என்று தினேஷ் கார்த்திக் கணித்துள்ளார்.
இந்தியா வங்கதேசம் அணிகள் மோதி வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
மோசமான டி20 உலக கோப்பைக்கு பிறகு நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேஎல் ராகுல், மீண்டும் வங்கதேசம் அணியுடன் ஒரு நாள் தொடரில் விளையாடினார். இப்போட்டி இவருக்கு நன்றாகவே அமைந்தது. 70 பந்துகளில் 73 ரன்கள் அடித்து இருந்தார். முக்கியமான கட்டத்தில் நல்ல பாட்னர்ஷிப் அமைத்து அணியின் கோரை சற்று மேலே எடுத்துச் சென்றார்.
அதன் பிறகு பந்துவீச்சில் அசத்திய முகமது சிராஜ் பத்து ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் இரண்டு மெய்டன் அடங்கும். இந்த 2022 ஆம் ஆண்டு அதிக மைய்டன் செய்த வீரர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்திருக்கிறது.
தொடர்ச்சியாக கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் வீக்கெட் வீழ்த்தி அபாரமாக செயல்பட்டு வரும் இவருக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. நேர்த்தியான பந்துவீச்சு மற்றும் ஆக்ரோஷம் இரண்டும் இவருக்கு பக்கபலமாக இருக்கிறது.
2023 50-ஓவர் உலகக் கோப்பையில் நிச்சயம் இவருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என பெருமிதமாக பேசியுள்ளார் தினேஷ் கார்த்திக். அவர் கூறியதாவது:
“புதிய பந்தில் நன்றாக பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தையும் தாக்கத்தையும் கொடுக்கிறார். மிடில் ஓவர்களிலும் ரன்களை கட்டுப்படுத்தி தக்க நேரத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். இந்திய அணி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பந்துவீச்சாளராக இவர் இருப்பார் என தெரிகிறது. ஒரு பக்கம் பும்ரா அணியில் இருந்தாலும், இன்னொரு பக்கம் வேகப்பந்துவீச்சிற்கு இவரும் போட்டி போட்டு வருகிறார்.” என்றார்.
முகமது சிராஜ் 2022ல் இதுவரை 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இவரது எக்கனாமி 4 33. இவரது சராசரி 22.7 ஆகும்.
இப்படி அபாரமாக செயல்பட்டு வருவதை குறிப்பிட்டு பேசிய தினேஷ் கார்த்திக், “வரும் 2023 50-ஓவர் உலக கோப்பையில் பெறுவதற்கு போராடிவரும் வீரர்களில் முகமது ராஜ் முக்கியமானவர். நிச்சயம் அணியில் இடம்பிடிப்பார். தேர்வுக்குழுவால் கவனிக்கக்கூடிய வீரராக இருக்கிறார்.” என்றார்.