இந்திய அணிக்கு வந்த போது நல்ல உடற்தகுதியுடன் இருந்தார் சுரேஷ் ரெய்னா. பிறகு இந்திய அணி நடுவரிசையின் முதுகெலும்பு ஆனார். பல வருடங்களாக இந்திய அணிக்காக நடுவரிசையில் இறங்கினார் ரெய்னா. இந்திய அணிக்காக அவர் பல போட்டிகளில் வென்று தந்துள்ளார். ஆனால், அவரது மோசமான பார்மால் அவர் இந்திய அணியில் இடம் பிடிக்க திணறி வருகிறார்.
ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக கடைசியாக 2015ஆம் ஆண்டு விளையாடினார் சுரேஷ் ரெய்னா. அதன் பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்க திணறி வருகிறார் சுரேஷ் ரெய்னா. உடற்தகுதி தேர்வுகளிலும் அவர் தோல்வி பெற்று வருகிறார். நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்குடன் சேர்ந்து இவரும் ‘யோ-யோ’ டெஸ்டில் தோல்வி பெறுவதாக செய்திகள் வருகின்றன. ஆனால், நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க காத்திருக்கிறார்.
தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் பல போட்டிகளை தோனியின் கேப்டன்சியில் தான் விளையாடி இருக்கிறார் சுரேஷ் ரெய்னா. இந்திய அணிக்காக மட்டும் இல்லாமல் அவர் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனியின் தலைமையில் விளையாடி இருக்கிறார். ‘கேப்டன் கூல்’ என்ற பட்டத்தையும் வாங்கியுள்ளார் தோனி, ஆனால் அவர் ‘கூல்’ இல்லை என ரெய்னா தெரிவித்தார்.
“அவரது கண்களில் உணர்ச்சி இல்லை. அவர் கண்ணாடி போடவில்லை என்றாலும் அதை கண்டுபிடிக்க முடியாது. ‘கமான் தோனி, ஏதாவது ரியாக்சன் கொடுங்க’ என எதிர்பார்ப்போம். அவரது கண்களில் உணர்ச்சி இல்லை. அவர் கண்ணாடி போடவில்லை என்றாலும் அதை கண்டுபிடிக்க முடியாது. ‘கமான் தோனி, ஏதாவது ரியாக்சன் கொடுங்க’ என எதிர்பார்ப்போம்.” என ரெய்னா கூறினார்.
“அவர் ஒரு நல்ல கேப்டன். அடுத்தது என்ன நடக்க போகிறது என்று கூறுவார். ஒவ்வொரு நிலைமைக்கும் ஒவ்வொரு பிளான் போட்டுவைத்திருப்பார் தோனி. போட்டிக்கு முன்பே ஒவ்வொரு நிலைமைக்கு ஒவ்வொரு பிளான் போட்டு வைத்து விடுவார் தோனி ,” என அவர் மேலும் கூறினார்.