என்னோட அடுத்த வேலையே இது தான்... முக்கிய தகவலை வெளியிட்ட ராகுல் டிராவிட் !! 1

என்ன நடந்தாலும் தற்பொழுது தேர்ந்தெடுக்கும் வீரர்களை வைத்து தான் உலக கோப்பை தொடரில் விளையாடவுள்ளோம் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

2022 டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு இந்திய அணி தான் உலக கோப்பையை வெல்லும் என்று பேசிப்பேசியே தகுதிச்சுற்று கூட முன்னேறாமல் இந்திய அணி தோல்வியை தழுவியது, ஆனால் இந்த முறை நிச்சயம் கோப்பையை விட்டுக் கொடுக்க கூடாது என்ற முனைப்பில் இருக்கும் இந்திய அணி, தகுதியான வீரர்களை அணியில் இணைப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

என்னோட அடுத்த வேலையே இது தான்... முக்கிய தகவலை வெளியிட்ட ராகுல் டிராவிட் !! 2

நாள் நெருங்க நெருங்க உலக கோப்பை தொடருக்கான அணியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டத்தில் இந்திய அணி நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது.

இதனால் ஆஸ்திரேலிய மைதானத்தில் எந்த வீரர்களை எடுத்தால் இந்திய அணிக்கு பலமாக அமையும் என்பதை ஆராய்ந்து தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இந்திய அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தொடருக்கான இந்திய அணி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

என்னோட அடுத்த வேலையே இது தான்... முக்கிய தகவலை வெளியிட்ட ராகுல் டிராவிட் !! 3

அதில் அவர் பேசியதாவது, “உலக கோப்பை தொடர் நெருங்க நெருங்க அணியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளோம், ஆனால் உலக கோப்பை தொடரில் 15 வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதி உள்ளதால் 18 முதல் 20 வீரர்கள் இலிருந்து அந்த 15 ஓவரில் வீரரை வடிகட்டி தேர்ந்தெடுப்பதற்கான முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தற்பொழுது திட்டமிட்டிருக்கும் அணியில் காயம் உட்பட சில விஷயங்களால் மாற்றங்கள் ஏற்படலாம், ஆனால் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அணியை தேர்ந்தெடுக்க வேண்டும், தேர்ந்தெடுத்த வீரர்கள் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் அவர்களை வைத்துதான் உலக கோப்பை தொடரை விளையாட வேண்டும்” என்று ராகுல் டிராவிட் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.