ஐசிசி விருதுகள் : சிறந்த டி20 பெர்பாமன்ஸ் விருதினை தட்டி சென்றார் யூஜெவேந்திர சகால்

ஐசிசி விருதுகள் : சிறந்த டி20 பெர்பாமன்ஸ் விருதினை தட்டி சென்றார் யூஜெவேந்திர சகால்

இந்திய அணியின் ரிஸ்ட் ஸ்பின்னர் யூஜவேந்திர சகா சிறந்த டி20 செயல்பாட்டிற்கான விருதினை தட்டி சென்றுள்ளார். 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூருவில் இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 போட்டியில் 25 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியதால் அவருக்கு இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் போட்டிகளுக்காக பெங்களூரு அணியில் ஆடிய சகாலுக்கு இந்த போட்டி தனது ஐந்து மைதானத்தில் ஆடுவது போலத்தான் இருந்தது என போட்டிக்குப் பின் கூறினார்.

England lose their last eight wickets for eight runs as India power to a 75-run win in the third Twenty20 in Bangalore to take the series 2-1

இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 202 ரண குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி யூஜவேந்திர சகாலின் சூழலில் சுருண்டது. அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தத இங்கிலாந்து அணி வீரர்கள் இயான் மார்கன் (40), ஜோ ரூட் (42) ஆகியோரை விக்கெட் எடுத்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார் சகால்.

இந்த விருத்திற்காக 62 பந்துகளில் 125 ரன் குவித்த எவின் லெவிஸ் மற்றும் 58 பந்துகளில் 109 ரன் குவித்த காலின் முன்ரோ ஆகியோர் போட்டியில் இருந்தனர். பின்னர் சிறந்த செயல்பாடு விருது யூஜவேந்திர சகாலுக்கு வழங்கப்பட்டது.

Editor:

This website uses cookies.