இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த பிறகு வெஸ்ட் இண்டீஸுக்கு பயணம் செய்கிறது இந்தியா. அந்த தொடரின் போது இந்திய அணியின் பயிற்சியாளராக அணில் கும்ப்ளே இருக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்த சாம்பியன்ஸ் டிராபியுடன் அணில் கும்ப்ளேவின் பயிற்சியாளர் பதவி முடிவதால், அடுத்த பயிற்சியாளர்க்கான விண்ணப்பத்தில் 6 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு சாம்பியன்ஸ் டிராபி முடிந்ததும் புது பயிற்சியாளர் அறிவிப்பார்கள் என தகவல் வந்தது. ஆனால், தற்போது ஜூன் 23-ஆம் தொடங்கப்போகும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அணில் கும்ப்ளே பயிற்சியாளராக இருப்பார் என தகவல் வந்தது.
சாம்பியன்ஸ் டிராபி முடிந்ததும் அணியுடன் இணைய புது பயிற்சியாளருக்கு நேரம் இருக்காது, இதன் காரணத்தினால் தான் இந்திய அணியின் பயிற்சியாளராக அணில் கும்ப்ளே இருப்பார் என பிசிசிஐ தலைவர் சி.கே. கண்ணா கூறினார்.
இந்நிலையில், விரேந்தர் சேவாக், டாம் மூடி, டோடா கணேஷ், லால்சந்த் ராஜ்புட் மற்றும் ரிச்சர்ட் பைபஸ் ஆகியோர் புது பயிற்சியாளருக்கான விண்ணப்பத்தை விண்ணப்பித்துள்ளனர்.
அணில் கும்ப்ளேவை கடந்த ஆண்டு நியமித்தது போலவே இந்த ஆண்டும் புது பயிற்சியாளர் நியமிக்கப்படும். கிரிக்கெட் நிர்வாக குழுவில் இருக்கும் சச்சின் டெண்டுல்கர், வி.வி.ஸ். லட்சுமண் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் விண்ணப்பதாரர்களை ஆய்வு செய்வார்கள். அவர்களை ஆய்வு செய்த பிறகு தான் புதிய பயிற்சியாளரை அறிவிப்பார்கள். இந்த ஆய்வை பிசிசிஐ சி.இ .ஓ. ராகுல் ஜோஹ்ரி கண்காணிப்பார்.