ஆஸ்திரேலியாவில் அதிக தோல்வி: மோசமான சாதனையில் சச்சினுடன் இணைந்தார் குக்

ஆஸ்திரேலிய மண்ணில் அதிக தோல்விகளை சந்தித்த வீரர்கள் என்ற மோசமான சாதனையில் சச்சினுடன் அலஸ்டைர் குக் இணைந்துள்ளார்.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

England Cricket Team’s skipper Alastair Cook celebrating his century.

இங்கிலாந்து தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. அந்த அணியின் முன்னாள் கேப்டனும் அனுபவ வீரருமான அலஸ்டைர் குக்கிற்கு இது 150-வது டெஸ்ட் ஆகும். சிறப்புமிக்க இந்த டெஸ்டில் குக் 7, 14 என சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.

BRISBANE, AUSTRALIA – NOVEMBER 26: Mitchell Starc of Australia celebrates after taking the wicket of Chris Woakes of England during day four of the First Test Match of the 2017/18 Ashes Series between Australia and England at The Gabba on November 26, 2017 in Brisbane, Australia. (Photo by Cameron Spencer/Getty Images)

அத்துடன் அலஸ்டர் குக் ஆஸ்திரேலியாவில் தோற்கும் 14-வது டெஸ்ட் இதுவாகும். இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தோல்வியை சந்தித்த வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

NOTTINGHAM, ENGLAND – JULY 15: England bowler James Anderson acknowledges the applause after taking five wickets in the innings during day two of the 2nd Investec Test match between England and South Africa at Trent Bridge on July 15, 2017 in Nottingham, England. (Photo by Stu Forster/Getty Images)

இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் (இந்தியா), சர் ஜேக் ஹோப்ஸ் (இங்கிலாந்து) ஆகியோர் 14 டெஸ்டில் தோல்விகளை சந்தித்துள்ளனர். பிரைன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்) 13 டெஸ்டில் தோல்வியடைந்து 2-வது இடத்திலும், வில்ஃப்ரெட் ரோட்ஸ் (12), ஜேம்ஸ் ஆண்டர்சன் (12) 3-வது இடத்திலும் உள்ளனர்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.