அந்த ஆர்சிபி வீரரும் சஞ்சு சாம்சன்-னும் ஒன்னா?.. முட்டாளா நீங்கள்? -பிசிசிஐ தேர்வு செய்த அணியை சாடிய முன்னாள் வீரர்! 1

பங்களாதேஷ் ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதற்கு கடுமையாக கேள்வி எழுப்பி இருக்கிறார் முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல்.

நியூசிலாந்து தொடரை முடித்துவிட்டு இந்திய வீரர்கள் வங்கதேசம் சென்றிருக்கின்றனர். வங்கதேச அணியுடன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றனர். 

அந்த ஆர்சிபி வீரரும் சஞ்சு சாம்சன்-னும் ஒன்னா?.. முட்டாளா நீங்கள்? -பிசிசிஐ தேர்வு செய்த அணியை சாடிய முன்னாள் வீரர்! 2

ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஏற்கனவே 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. நியூசிலாந்து தொடரில் இடம் பெற்றிருந்த சஞ்சு சாம்சன், பங்களாதேஷ் ஒருநாள் தொடருக்கு எடுக்கப்படவில்லை. 

நியூசிலாந்து தொடரிலும் ஆறு போட்டிகளில் (3 டி20, 3 ஓடிஐ) ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவது ஏன்? என்று பலரும் பல்வேறு விதமாக பிசிசிஐக்கு கேள்வி எழுப்பினர். ஆனால் எதற்கும் செவிசாய்க்காமல் தொடர்ந்து சஞ்சு சாம்சனை பிசிசிஐ புறக்கணித்து வருகிறது. 

அந்த ஆர்சிபி வீரரும் சஞ்சு சாம்சன்-னும் ஒன்னா?.. முட்டாளா நீங்கள்? -பிசிசிஐ தேர்வு செய்த அணியை சாடிய முன்னாள் வீரர்! 3

இன்னும் கூடுதல் வாய்ப்புகள் கொடுத்தால் மட்டுமே அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை தெரிந்துகொள்ள முடியும் என்று முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் அறிவுறுத்தி விட்டார். அந்த வகையில் தற்போது நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டவுல், வங்கதேச தொடரில் சஞ்சு சாம்சன் இல்லாதது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அவர் பேசியதாவது:

“சஞ்சு சாம்சன் வெளியேற்றப்பட்டு அந்த இடத்திற்கு ரஜத் பட்டிடார் வந்திருக்கிறார். ஆர்சிபி அணிக்காக அவர் நன்றாக விளையாடினார். இதன் காரணமாக பிசிசிஐ எடுத்து இருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சஞ்சு சாம்சன் தற்போது நன்றாகத் தான் விளையாடி வருகிறார். அவரை ஏன் வெளியில் அனுப்ப வேண்டும்?

அனுபவம் மிக்க அவரை அணி வெளியேற்றிவிட்டு, இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுப்பதன் தேவை என்ன?. டி20 போட்டியில் ஆடிய ரஜத் பட்டிடார் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் ஒரே மாதிரியான வீரர்களா? எதன் அடிப்படையில் பிசிசிஐ தேர்வு செய்து வருகிறது.” என கேள்வி எழுப்பினார். 

அந்த ஆர்சிபி வீரரும் சஞ்சு சாம்சன்-னும் ஒன்னா?.. முட்டாளா நீங்கள்? -பிசிசிஐ தேர்வு செய்த அணியை சாடிய முன்னாள் வீரர்! 4

மேலும் இந்திய அணியின் துவக்க வீரர்கள் சரியாக செயல்படவில்லை என்று விமர்சித்து, அடுத்த தலைமுறை வீரர்களை அணிக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அவர் கூறியதாவது: 

“சென்னையைச் சேர்ந்த இளம் வீரர் ஜெகதீசன் ரன்களை மலை போல குவித்து வருகிறார். மற்றொரு துவக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் இரட்டை சதம் அடித்து அசத்திருக்கிறார். 7 சிக்ஸர்கள் அடித்து பலரையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். இப்படி துவக்க இடத்திற்கு பல இளைஞர்கள் இருக்கும் பொழுது ஏன் இந்திய அணி அதிலும் திணறுகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *