தற்போது விராட் கோஹ்லி தலைமையில் இருக்கும் இந்திய டெஸ்ட் அணி சிறந்த டெஸ்ட் அணியாக விளங்கும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
ரவி சாஸ்திரி 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரை இந்திய அணியின் இயக்குனராக இருந்தார் தற்போது இவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க பட்டு உள்ளார் 2019வரை ரவி சாஸ்திரி தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பர்.
55 வயதான ரவி சாஸ்திரி 2019 உலக கோப்பை வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பர், இவர் தலைமையில் இந்தியா அணி முதலில் இலங்கை அணியுடன் விளையாட உள்ளது. இதில் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளும், ஐந்து ஒருநாள் போட்டிகளும் ஒரு டி 20 போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் ஜூலை மாதம் இலங்கையில் துடங்கும்.
” இதற்க்கு முன்னாள் எந்த ஒரு இந்திய அணியும் இதை விட சிறந்த டெஸ்ட் அணி அணியாக இருந்து இருக்க முடியாது, இந்த டெஸ்ட் அணியில் திறமை வாய்ந்த இளம் வீரர்கள் அதிகம் உள்ளார்கள். அவர்கள் இந்திய அணியின் வெற்றிக்காக பாடு படுவார்கள் ” என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர இந்திய அணியின் பந்து வீச்சாளரான சாஹீர் கான் இந்திய அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக இருப்பார், மேலும் டிராவிட் இந்திய வீர்களின் பேட்டிங் பயிற்சியாளராக இருப்பர்.
தற்போது ராகுல் டிராவிட் இந்தியா ஏ அணிக்காகவும் இந்தியா U-19 அணியாகவும் தலைமை பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிட்ட தக்கது.
இதற்க்கு முன்னதாவும் ராகுல் டிராவிட் தான் இந்தியா ஏ மற்றும் இந்தியா U-19 அணிக்காக தலைமை பயிற்சியாளராக செயல் பட்டார் தற்போது இந்த பயிற்சியாளர் பதிவில் தொடர்ந்து நீடிக்க ராகுல் டிராவிடிற்க்கு பிசிசிஐ இன்னும் இரண்டு ஆண்டு காலம் நீட்டிப்பு வழங்கியுள்ளது.
இதன் மூலம் 2019 வரை ராகுல் டிராவிட் இந்தியா ஏ மற்றும் இந்தியா U-19 அணிக்காக தலைமை பயிற்சியாளராக செயல் படுவார்.