டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் அடித்த முதல் 10 வீரர்கள்

கிரிக்கெட்டில் டி20 போட்டியை அறிமுக படுத்திய பிறகு, பல வீரர்களுக்கு பொறுமையாக விளையாடுவது என்றால் என்னவென்றே தெரியாமல் போய் விட்டது. டி20 கிரிக்கெட்டில் ஓவர்கள் குறைவாக உள்ளதால், அடித்து விளையாடி ரன் சேர்க்க நினைப்பார்கள். இதனால், டி20 கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேனுக்கான போட்டி என்பார்கள். அதுவும் சரி தான் ! ஓவர்கள் குறைவாக உள்ளதால் ரன் சேர்க்க பவுண்டரி சிக்ஸர்களாக விளாசுவார்கள். இதன் மூலம், ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்கள் வீரர்கள். டி20 கிரிக்கெட்டில் இதுவரை அதிக சிக்ஸர் அடித்த முதல் 10 வீரர்களை பார்ப்போம்:

ஏபி டி வில்லியர்ஸ்

தென்னாபிரிக்காவின் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் இந்த பட்டியலில் 10வது இடத்தை பிடித்திருக்கிறார். 234 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஏபி டி வில்லியர்ஸ் 6003 ரன் அடித்துள்ளார், அதில் 258 சிக்ஸர்கள் அடங்கும். பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, தென்னாபிரிக்கா, டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்காக டி20 போட்டியில் விளையாடியுள்ளார் டி வில்லியர்ஸ்.

ராஸ் டெய்லர்

நியூஸிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ராஸ் டெய்லர் நியூஸிலாந்து அணி, இந்தியன் பிரீமியர் லீக், பிக் பாஷ் லீக், கரிபியன் டி20 லீக் போன்ற தொடரில் விளையாடி இருக்கிறார். இதுவரை 237 போட்டிகளில் விளையாடியுள்ள ராஸ் டெய்லர் 259 சிக்ஸர் அடித்து இந்த பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா

இந்திய அணியின் அதிரடி நடுவரிசை வீரர் சுரேஷ் ரெய்னா டி20 போட்டி என்றாலே எதிரணி பந்து வீச்சாளர்களை சுளுக்கு எடுத்து விடுவார். 259 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா 265 சிக்ஸர் நடித்து 6872 ரன் சேர்த்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் லயன்ஸ், இந்தியா, உத்தரபிரதேசம் ஆகிய அணிகளுக்காக சுரேஷ் ரெய்னா டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

ரோகித் சர்மா

டெக்கான் சார்ஜர்ஸ், இந்தியா, இந்தியா A, மும்பை, மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ரோகித் சர்மா. இதுவரை 259 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 6663 ரன் அடித்துள்ளார், அதில் அவர் விளாசிய 268 சிக்ஸர்கள் அடங்கும்.

ஷேன் வாட்சன்

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் இந்தியன் பிரீமியர் லீக், பிக் பாஷ் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், கரிபியன் டி20 லீக் என அனைத்து டி20 தொடர்களிலும் விளையாடியுள்ளார். இதுவரை 238 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வாட்சன் 299 சிக்ஸர் அடித்து இந்த பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறார்.

டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியா, டெல்லி டேர்டெவில்ஸ், நியூ சவுத் வேல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், சிட்னி சிக்ஸர்ஸ், சிட்னி தண்டர் ஆகிய அணிகளுக்காக டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர். 238 போட்டிகளில் 7572 ரன் அடித்து 314 சிக்ஸர் விளாசியுள்ளார் டேவிட் வார்னர்.

டுவைன் ஸ்மித்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி தொடக்கவீரர் டுவைன் ஸ்மித் 306 போட்டிகளில் விளையாடி 347 சிக்ஸர் அடித்து இந்த பட்டியலில் 4வது இடத்தை பிடித்து .இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ், இந்தியன் பிரீமியர் லீக், பிக் பாஷ் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், கரிபியன் டி20 லீக் என அனைத்து டி20 தொடரிலும் இவர் விளையாடி இருக்கிறார்.

பிரண்டன் மெக்கல்லம்

நியூஸிலாந்து அணியின் அட்டகாச தொடக்கவீரர் எந்த விதமான போட்டிகளாக இருந்தாலும் சிக்ஸர், பவுண்டரி விளாசி ரசிகர்களை குஷி படுத்துவார். இவர் நியூஸிலாந்து அணி, இந்தியன் பிரீமியர் லீக், பிக் பாஷ் லீக், கரிபியன் டி20 லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் என அனைத்து போட்டிகளில் விளையாடி 399 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார்.

கிரண் பொல்லார்ட்

பிக் பாஷ் லீக், கரிபியன் டி20 லீக், இந்தியன் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், பங்களாதேஷ் பிரீமியர் லீக் போன்ற தொடர்களில் விளையாடியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் 392 போட்டிகளில் விளையாடி 500 சிக்ஸரக்கும் மேல் அடித்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

கிறிஸ் கெய்ல்

டி20 கிரிக்கெட் என்றாலே அனைவருக்கும் இவரின் பெயர் தான் நியாபகம் வரும். டி20 கிரிக்கெட்டில் பல சாதனை படைத்திருக்கும் கிறிஸ் கெய்ல், அதிக சிக்ஸர் அடித்து இந்த பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறார். உலகில் நடக்கும் எல்லா லீக் தொடரிலும் விளையாடும் கிறிஸ் கெய்ல் 309 போட்டிகளில் 772 சிக்ஸர்கள் அடித்து இந்த சாதனையை தன் கையில் வைத்திருக்கிறார்.

கடைசியாக அப்டேட் செய்த நாள் – 18/11/2017

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.