இது வரை ஐபில் ஏலத்தில் அதிக விலைக்கு சென்ற 10 வீரர்கள் 1

அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 11வத சீசனுக்கான ஏலம் இன்று தொடங்கியது. அனைத்து அணிகளும் சில நட்சத்திர வீரர்களை வாங்கி பைக்குள் போட்டது. அதே நேரத்தில் கிறிஸ் கெய்ல், மலிங்கா, ஹசிம் ஆம்லா போன்ற நட்சத்திர வீரர்களை வாங்க யாரும் முன் வர வில்லை. நாம் அனைவரும் எதிர்பார்த்தது போலவே இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அதிக விலைக்கு சென்றார். இந்நிலையில், முதல் நாள் ஏலத்தின் முடிவில் அதிக விலைக்கு சென்ற 10 வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.

கேதார் ஜாதவ் – 7.8 கோடி

Kedar Jadhav, Ravindra Jadeja, IPL 2017, Videos, Cricket

இதற்கு முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி கொண்டிருந்த கேதார் ஜாதவை 7.8 கோடி கொடுத்து வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சஞ்சு சாம்சன் – 8 கோடி

Cricket, India, Sri Lanka, Ranji Trophy, Sanju Samson

இந்திய அணியின் இளம் வீரர் சஞ்சு சாம்சன் கடந்த சீசனில் டெல்லி அணிக்காக விளையாடினார். இந்த ஏலத்தின் போது அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 கோடி கொடுத்து வாங்கியது.

க்ருனால் பாண்டியா – 8.8 கோடி

இது வரை ஐபில் ஏலத்தில் அதிக விலைக்கு சென்ற 10 வீரர்கள் 2

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் க்ருனால் பாண்டியாவை 8.8 கோடி கொடுத்து வாங்கியது பெங்களூரு அணி. ஆனால், RTM கார்டு உபயோகித்து மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்து கொண்டது.

ரஷீத் கான் – 9 கோடி

ரஷீத் கான், ஐதராபாத். சுரேஷ் ரெய்னா, ஆரோன் பின்ச், பிரண்டன் மெக்கல்லம், குஜராத், ஐபில்

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானை பஞ்சாப் அணி 9 கோடிக்கு வாங்கியது. ஆனால் RTM கார்டு உபயோகித்து ஐதராபாத் அணி தக்கவைத்து கொண்டது.

கிளென் மேக்ஸ்வெல் – 9 கோடி

Cricket, India, Sri Lanka, Most runs in Boundaries

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல் கடந்த வருடம் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். மீண்டும் ஒரு முறை ஏலத்திற்கு வந்த இவரை, 9 கோடி கொடுத்து அள்ளியது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.

மிட்சல் ஸ்டார்க் – 9.4 கோடி

இது வரை ஐபில் ஏலத்தில் அதிக விலைக்கு சென்ற 10 வீரர்கள் 3

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கடந்து ஆண்டு ஐபில்-இல் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால், மீண்டும் ஏலத்தில் பேர் கொடுத்த அவரை 9.4 கோடிக்கு வாங்கி அணியை பலப்படுத்தியது கொல்கத்தா அணி.

கிறிஸ் லின் – 9.6 கோடி

Cricket, India, Big Bash League, Australia, Chris Lynn

கடந்த முறை கொல்கத்தா அணிக்காக விளையாடிய அதிரடி வீரர் கிறிஸ் லின்னை, மீண்டும் 9.6 கோடி கொடுத்து வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

மனிஷ் பாண்டே – 11 கோடி

இது வரை ஐபில் ஏலத்தில் அதிக விலைக்கு சென்ற 10 வீரர்கள் 4

இந்திய அணியின் இளம் வீரரான மனிஷ் பாண்டே, இதற்கு முன்பு கொல்கத்தா அணிக்காக விளையாடினார் என்று நாம் அனைவருக்குமே தெரியும். இந்த ஏலத்தில் அவரை ஐதராபாத் அணி 11 கோடிக்கு வாங்கியது.

லோகேஷ் ராகுல் – 11 கோடி

Cricket, India, New Zealand, Virat Kohli, Ajinkya Rahane, KL Rahul
He is a rare talent and should be in the scheme of things of the Indian selectors despite mediocre showing in the recent past.

இந்திய அணியின் தொடக்கவீரரான லோகேஷ் ராகுலை வாங்க ஏலத்தில் போட்டி நிலவியது, ஆனால் கடைசியாக 11 கோடி கொடுத்து அவரை முடிவு செய்தது கிங்ஸ் XI பஞ்சாப் அணி.

பென் ஸ்டோக்ஸ் – 12.5 கோடி

Cricket, IPL, IPL 2018, IPL Auction, Expensive Players 2018

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது பென் ஸ்டோக்ஸ் தான்.. அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12.5 கோடிக்கு வாங்கியது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *