இந்த வருடம் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் முடிந்ததில் இருந்து அடுத்தடுத்து இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என அனைத்து அணிகளைய்ம் நொருக்கி அனைத்து தொடர்களையும் வென்றெடுத்து தனிக்காட்டு ராஜாவாக நடமாடி வருகிறது இந்தியா.
தற்போது மீண்டுல் இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. 3 டெஸ்ட், மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி இலங்கை வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
தற்போது பயிற்சி பெற்றுவரும் இலங்கை அணி, நாளை கொல்கத்தாவில் நடைபெறும் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் போர்ட் பிரெசிடென்ட்ஸ் லெவனை எதிர்கொள்கிறது.
இந்த பயிற்சி ஆட்டத்திற்க்காக போர்ட் பிரசிடென்ட்ஸ் அணி சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அந்த அணிக்கு கேப்டனாக நமன் ஓஜா நியமிக்கப்பட்டார். பின்னர் ரஞ்சி கோப்பைத் தொடரின் போது நமன் ஓஜா காயமடைந்தார். இதன் காரணமாக நமன் ஓஜாவிற்கு மாற்றாக பஞ்சாப் அணியின் 19 வயதான இளம் வீரர் அன்மோல்பிரீட் சிங் அழைக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் அணியின் வீரரான அவர் இந்த வருட ரஞ்சிக் கோப்பைத் தொடரில் அற்புதமாக செயலபட்டுவருகிறார். சட்டிஸ்கர் அணிக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டம் சிங்கில் ஹேன்டில் அவரது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. அந்த போட்டியில் 267 ரன் குவித்து சட்டிஸ்கர் அணியை தரைமட்டமாக்கினார். இதனால் பஞ்சாப் அணி ‘டி’ பிரிவில் முதலிடத்தை பிடித்தது.
மேலும், இவரது ரஞ்சி கோப்பையின் அறிமுகப் போட்டியில் ஹிமாச்சல பிரேதேச அணிக்கு எதிராக ஒரு அரை சதம் அடித்தார். அடுத்து கோவா அணிக்கு எதிராக ஒரு சதமும், அடுத்து சட்டிஸ்கர் அணிக்கு எதிராக ஒரு அரைசதமும் விளாசினார். தற்போது இந்த வருடன் ரஞ்சிக்கோப்பைத் தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியளில் 3ஆம் இடத்தில் உள்ளார். மேலும், முதலிடத்தில் 6 ஆட்டத்தில் 573 ரன்னுடன் ஹனுமா விகாரியும், இரண்டாம் இடத்தில் 6 ஆட்டத்தில் 502 பிரசாந்த் சோப்ரா ரன்னுடனும் உள்ளனர். 3ஆம் இடத்தில் உள்ள அன்மோல் பிரீட் சிங் வெறும் 3 ஆட்டத்தில் ஒரு அரை சதம் , ஒரு சதம், ஒரு இரட்டை சதம் என 430 ரன் குவித்துள்ளார். இதன் காரணமாக இலங்கைக்கு எதிரான் பயிற்சி ஆட்டத்தில் ஆட கேப்டனாக இருந்து நமம் ஓஜாவிற்கு பதிலாக அழைக்கப்பட்டுள்ளார்.
மேலும், கேப்டனாக இருந்த நமன் ஓஜா காயம காரணமாக விலகியுள்ளதால், அவருக்கு மாற்றாக கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
போர்ட் பிரெசிடன்ட்ஸ் லெவன் அணி :
சஞ்சு சாம்சன் (கேப்டன்), அபிஷேக் குப்தா, ஆகாஷ் பண்டாரி, அவேஷ் கான், ஜலஜ் சக்சேனா, ஜிவாஞ்சோட் சிங், ரவி கிரன், ரோஹன் பிரேம், பி சந்தீப், டான்மை அகர்வால், சந்தீப் வரியர், அன்மோல்பிரீட் சிங்