வீடியோ : மீண்டும் மேக்ஸ்வெல் பெயில்சை தட்டிய தோனி!! 1

அப்படி என்ன தான் அவசரமோ தெரியல மேக்வெல்லிற்கு, ஸ்டம்பிற்க்கு பின்னால் தோனி நிற்பது அவருக்குத் தெரியுமா? இல்லை தெரியாதா? இல்லை பந்தை அடித்து விடலாம் என க்ரீசை விட்டு வெளியே வருகிறாரா? இல்லை தோனி பந்தை விட்டுவிடுவார் என்ற நட்பாசையா அவருக்கு?

மீண்டும் மீண்டும் சகால் பந்து வீச, மேக்ஸ்வெல் க்ரீசை விட்டு இறங்கி வர, பந்து மிஸ் ஆகி தோனி பெய்லசை தட்ட என டைப் செய்து செய்து கடுப்பாகிவிட்டது.

இந்திய அணி சற்று விக்கெட் எடுக்க தற்போது திணறினாலும் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை சாய்த்து ரன்களை கட்டுப்படுத்தி வருகிறது.

43 ஆவது ஒவரின் முதல் பந்தில் மேக்ஸ்வெல் சகால் பந்தை இறங்கி வந்து அடிக்க முற்ப்பட்டார், சுதாரித்துக்கொண்ட சகால் சற்று வைடாக பந்தை வீச வழக்கம் போல் இந்த தொடரில் மூன்றாவது முறையாக அந்தை மிஸ் செய்ய தோனியின் அவரது வேகத்தில் பெய்ல்சை தட்டி மேக்ஸ்வெல்லை வெளியேற்றினார்.

https://twitter.com/Cricvids1/status/911909598038081536

இந்திய அணி இந்த பேட்டிங் பிச்சில் தற்போது பந்து வீச்சில் மீண்டு வந்து 5 விகெட்டை வீழ்த்தியுள்ளது. இன்னும் சில ஓவர்கள் மீதம் இருக்கும் நிலையில் 300க்கும் கட்டுப்படுத்தும் வாய்ப்பு அதிகமாக இருக்கிரது.

வீடியோ : மீண்டும் மேக்ஸ்வெல் பெயில்சை தட்டிய தோனி!! 2
Aaron Finch of Australia bats during the 3rd One Day International between India and Australia held at the Holkar Stadium in Indore on the 24th September 2017
Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS

பேட்டிங் பிட்ச் ஒன்று கிடைத்து விட்டது என ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் ஒரு காட்டு காட்டி சதம் அடித்து விட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *