இந்தியன் பிரீமியர் லீக் இறுதி போட்டிக்கு முன் இந்திய கிரிக்கெட்டர்களின் சம்பளத்தை உயர்த்த இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் அணில் கும்ப்ளே ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.
சம்பள உயர்வை குழு வாரியமாக தான் அதிகரிக்கபடும் என கூறப்பட்டிருக்கிறது. A பிரிவில் டெஸ்ட் வீரர்களும், B பிரிவில் ஒருநாள் போட்டி வீரர்களும், C பிரிவில் டி20 வீரர்களுக்கும் சம்பளம் அதிகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு ஒரு போட்டிக்கு 7 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டது. பிறகு ஒரு போட்டிக்கு 15 லட்சமாக உயர்த்தியது பிசிசிஐ.
மகேந்திர சிங்க் தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால், A பிரிவில் இருந்தாலும், மற்ற வீரர்களுக்கு வழங்கும் சம்பளத்தை விட தோனி குறைவாகவே பெறுவார்.
தனக்கு 30 சதவீதம் உயர்த்தவேண்டும் என கேட்டுக்கொண்டார். தற்போது அதிக சம்பளம் பெரும் பயிற்சியாளராய் கும்ப்ளே இருக்கிறார். அவர் சம்பளமாக 6 லட்சம் பெறுகிறார், ஆனால், அவரது சேவைகள் பிசிசிஐக்கு 8 கோடி ஆகும்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பள உயர்வு குறித்து குரல் எழுப்பினர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான சம்பளம் பெறுவதாக கூறினார்கள்.
இருவரின் கோரிக்கைக்கு பிசிசிஐ இன்னும் எந்த முடிவும் எடுக்க வில்லை.