கதை என்ன?
நேற்று (ஜூன் 25) நடந்த வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா 2வது ஒருநாள் போட்டியில் 105 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதனால், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என முடிவு எடுத்திருக்கிறார்.
இரண்டாவது ஒருநாள் போட்டி முடிந்த பிறகு,”நாங்கள் உட்கார்ந்து அணியின் மாற்றங்கள் பற்றி குழுவாக முடிவெடுப்போம். நாங்கள் ஆன்டிகுவா சென்று, குழுவாக மீண்டும் சேர்ந்து, சில வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்போம்,” என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
இந்த முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் இளம் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், ஆனால் அந்த போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டது. இருந்தாலும், அடுத்த போட்டியில் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியை சாய்த்தார் குல்தீப் யாதவ்.
ஒரு வேளை உங்களுக்கு தெரியவில்லை என்றால்….
தற்போது வெஸ்ட் இன்டீஸுக்கு சென்று 5 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டி20 தொடரை விளையாடி கொண்டிருக்கிறது. இந்திய அணி இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி பெற்று அப்படியே வெஸ்ட் இண்டீஸ் சென்றது.
அவர்கள் பணத்திற்காக சரியாய் இருந்ததால், அவர்கள் ஒன்றும் செய்ய வில்லை. ஆனால், மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
விவரங்கள்:
வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணியை பாராட்டிய போது, இந்திய இன்னிங்க்ஸை சிறப்பாக தொடங்கிய ஷிகர் தவான் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியவர்களை பாராட்டினார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி மற்றும் கேதார் ஜாதவின் பங்களிப்பால் இந்திய அணி சிறப்பாக பினிஷ் செய்தது. இதனால், இந்திய அணியின் கேப்டன் அவர்களையும் விராட் கோலி பாராட்டினார்.
அடுத்தது என்ன?
இந்திய கிரிக்கெட்டில் அடுத்த பெரிய வீரர் வீரர் என்று எதிர்பார்க்கப்படும் ரிஷப் பண்ட், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணியில் உள்ளார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளோம் என விராட் கோலி குறிப்பிட்டுள்ளார். இதனால், டெல்லி வீரர் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
இந்த இடது கை டெல்லி வீரர் ரிஷப் பண்டும் விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் தான். இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் யுவராஜ் சிங் மற்றும் மகேந்திர சிங் தோனியிடம் சில முக்கிய நேரங்களை செலவழிகிறார். இதனால், ஒரு சிறந்த கிரிக்கெட்டராய் வர அவருக்கு உதவி செய்யும்.
எழுத்தாளரின் கருத்து:
ரோகித் சர்மா மற்றும் ஜேஸ்ப்ரிட் பும்ரா ஆகியோருக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு அளித்தது இந்திய கிரிக்கெட் வாரியம். இதனால், அஜிங்க்யா ரஹானே மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணிக்கு திரும்பினர். இந்த வாய்ப்பை இருவரும் இரண்டு கையால் பிடித்து கொண்டு, சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதனால், 2019 உலக கோப்பைக்கு இந்திய அணியை தேர்வு செய்ய இந்திய வாரியத்துக்கு கடினமான விஷயம் தான்.