Virat Kohli, Anushka Sharma, IPL 2017, Cricket

நியூயார்க்: இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில் இனி நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான போட்டிகளுக்கு பயிற்சி எடுக்காமல் கோஹ்லி என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் பாருங்க.

இந்திய அணியின் தலைமை கோச்சாக இருந்த அனில் கும்ப்ளே அப்பதவியை ராஜினாமா செய்தார். இதில் முதல் காரணமாக கோஹ்லிக்கும் கும்ப்ளேவுக்கும் இடையே கருத்து வேறுபாடுதான் காரணம் என்று சொல்லப்பட்டது.

மேலும் அனில் கும்ப்ளேவோ வீரர்களை தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட வைத்து டிரில் எடுத்துவிடுவார் என்றும் இது கோஹ்லிக்கு பிடிக்கவில்லை என்பதாலேயே மோதல் ஆரம்பித்தது என்றும் கூறப்படுகிறது.

இறுதி போட்டி

இங்க இவ்வளோ அமளி, துமளி நடக்குது.. கோஹ்லி என்ன செய்துகொண்டுள்ளார் தெரியுமா? 1

இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதி போட்டியில் நீண்ட வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதியது. அப்போது 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா கடும் தோல்வியை சந்தித்தது.

மேற்கு இந்திய தீவுகள்

இங்க இவ்வளோ அமளி, துமளி நடக்குது.. கோஹ்லி என்ன செய்துகொண்டுள்ளார் தெரியுமா? 2

இதைத் தொடர்ந்து மேற்கு இந்திய தீவுகளுடனான சர்வதேச ஒருநால் போட்டியில் மொத்தம் 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் டி20 போட்டிகளில் அந்த நாட்டிடம் இந்தியா தோல்வி அடைந்தது. வரும் 26-ஆம் தேதி இந்திய அணி இலங்கையுடன் மோத போகிறது.

கோஹ்லி மீது கோபம்

இன்ஸ்டாகிராமில் படங்கள்

தொடர் தோல்விகளால் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். மேலும் கும்ப்ளே ராஜினாமா செய்ய கோஹ்லியே காரணம் என்று சொல்லப்படுவதால் சிறந்த ஆசானை இந்திய அணி இழந்து விட்டதாகவே ரசிகர்கள் கருதுகின்றனர். மேலும் தோல்விகளிலிருந்து பாடம் கற்பித்துக் கொண்டு அதை இனியாவது சாதனையாக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட இல்லாமல் இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் இலங்கை தொடருக்கு செல்வதற்கிடையே உள்ள விடுமுறையை கோஹ்லி நியூயார்க் சென்று கழித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் படங்கள்

குற்ற உணர்ச்சியே இல்லை

அதுவும் தனியாக இல்லை, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன். இதுதொடர்பான புகைப்படங்களை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

குற்ற உணர்ச்சியே இல்லை

தொடர் தோல்வி அடைந்து வரும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் அடுத்த போட்டிக்கான பயிற்சிகளிலும் ஈடுபடாமல் கேப்டனாக உள்ள இவர் ஒரு நடிகையுடன் இப்படி சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் நெருப்பை கக்குகின்றனர்.

ரவி சாஸ்திரியுடன் கெமிஸ்ட்ரி

இங்க இவ்வளோ அமளி, துமளி நடக்குது.. கோஹ்லி என்ன செய்துகொண்டுள்ளார் தெரியுமா? 3

கும்ப்ளே கடுமை காட்டும் குடும்பத் தலைவராக இருந்ததால் கோஹ்லி, கும்ப்ளேவுடன் மல்லுக்கட்டினார். ஆனால் தற்போது நியமிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரியோ படு ஜோவியல் டைப். மேலும் அனுஷ்கா சர்மா விவகாரங்களை கூட அவர் கண்டுக் கொள்ள மாட்டார். இதனால் ரவி சாஸ்திரியுடன் கோஹ்லிக்கு கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகும் என்றே தெரிகிறது.

 

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *