முன்னாள் நியூஸிலாந்து அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி, தனது சிறந்த அணியை தெரிவித்தார். அந்த அணியில் தற்போது விளையாடி கொண்டிருக்கும் வீரர்கள் இருவர் மட்டும் தான்.
இந்த அணியில் சில ஆச்சரியமான நீக்கங்கள் இருந்தாலும், இந்த அணி சிறப்பான அணியாய் காணப்படுகிறது. இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி, அந்த அணிக்கே பயிற்சியாளர் ஆன வெட்டோரி, அவரின் சிறந்த அணிக்கு விராட் கோலியை கேப்டனாக நியமித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் டேனியல் வெட்டோரி ஓய்வு பெற்ற பிறகு கேப்டனாக செயல் பட்டு கொண்டிருக்கும் விராட் கோலி, நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் தன்னுடைய 31வது சதத்தை அடித்து அசத்தினார். இதனால், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை முந்தினார்.
அவரின் அணியில் பல சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள், ஏன் ரிக்கி பாண்டிங்கே இருக்கிறார், இருந்தாலும் அந்த அணிக்கு விராட் கோலியை கேப்டனாக நியமிக்க காரணத்தை கூறினார் வெட்டோரி.
“நான் விராட் கோலியை பல நாட்களாக பார்த்து வருகிறேன். அவருடைய திறமையை கண்டு நான் வியந்துள்ளேன். அவர் எப்பொழுதும் வெற்றி பெறவேண்டும் என குறிக்கோளிலேயே இருப்பார். அவர்கள் எப்படி இருந்தாலும் வெற்றி பெறுவார்கள், ஆனால் கோலியை கேப்டனாக போடுவது நல்லது,” என வெட்டோரி கூறினார்.
மேலும், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார். இவர்களை பற்றி அறிமுகம் செய்யவே தேவை இல்லை.
“நான் சந்தித்த கடினமான பேட்ஸ்மேன் அவர் தான். பந்தை அழகாக பார்த்து அடிப்பார்,” என டேனியல் வெட்டோரி தெரிவித்தார்.
இந்திய அணிக்காக டி20, 50 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியை வென்று தந்த மகேந்திர சிங் தோனிக்கு டேனியல் வெட்டோரியின் அணியில் இடம் இல்லை.
டேனியல் வெட்டோரியின் சிறந்த அணி:
1. ரிக்கி பாண்டிங்
2. ராகுல் டிராவிட்
3. விராட் கோலி
4. ஏபி டி வில்லியர்ஸ்
5. சச்சின் டெண்டுல்கர்
6. குமார் சங்ககரா
7. ஆடம் கில்கிறிஸ்ட்
8. ஷேன் வார்னே
9. முத்தையா முரளிதரன்
10. கிளென் மெக்ராத்
11. ரிச்சர்ட் அட்லீ
12. ஜாக் காலிஸ்