நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து லோகேஷ் ராகுலை நீக்கியதற்கு பலர் கேள்வி எழுப்பிறார்கள். இந்திய அணியின் வலது கை வீரர் லோகேஷ் ராகுல், இலங்கை தொடரில் தொடர்ந்து 4வது இடத்தில் இறங்கி விளையாடினார், ஆனால் சொல்லி கொள்ளும் படி ஒரே போட்டியில் கூட சிறப்பாக விளையாடவில்லை. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம் பிடித்த லோகேஷ் ராகுல் ஒரே போட்டியில் கூட விளையாடவில்லை. அதன் பிறகு நியூஸிலாந்து தொடரில் இருந்து அவரை நீக்கி விட்டார்கள்.
லோகேஷ் ராகுல் நீக்கத்தை பற்றி அனைவரும் கேள்வி கேட்டுக்கொண்டிருந்த போது, நியூஸிலாந்துக்கு எதிரான தொடர் தொடங்குவதற்கு முன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசினார். நடுவரிசை வீரராக இருந்த ரஹானே தொடக்கவீரராக மாறிய பிறகு அவர் வாய்ப்புக்காக காத்திருக்கவேண்டும் என கோலி கூறினார்.
“இந்த தொடரில் லோகேஷ் ராகுலுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பிடித்தார். லோகேஷ் ராகுல் அதிகமாக தொடக்கத்தில் தான் விளையாடுகிறார், தொடக்கவீரர்கள் இருப்பதால் நடுவரிசையில் ரஹானேவுக்கு இடம் கிடைக்கவில்லை, அதே சூழ்நிலை ராகுலுக்கும் ஏற்பட கூடாது. சிறிது நாள் உள்ளூர் போட்டிகளில் லோகேஷ் ராகுல் விளையாடட்டும், தொடர்ந்து நடுவரிசையில் விளையாடுவதால் தினேஷ் கார்த்திகை தேர்வு செய்துள்ளோம்,” கேப்டன் கோலி கூறினார்.
“நடுவரிசையில் எப்படி பேட்டிங் விளையாடவேண்டும் என்று அவருக்கு தெரியும் அதனால் அவர் தான் இந்த இடத்திற்கு சரியான வீரர். உள்ளூர் போட்டிகள் மற்றும் ஜூனியர் இந்திய அணிக்காக அவர் சிறப்பாக விளையாடி உள்ளார். இதனால சிறப்பாக விளையாடுபவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்,” என கோலி தெரிவித்தார்.
இலங்கை தொடரின் போது பேக் -அப் தொடக்கவீரராக லோகேஷ் ராகுலை வைத்திருந்தார்கள், ஆனால் அவர் சொதப்பிவிட்டார். ஒருநாள் போட்டிகளில் நல்ல தொடக்கவீரராய் தொடங்கினார். ஒருநாள் போட்டிகளில் தொடக்கவீரராய் அறிமுகம் ஆகிய லோகேஷ் ராகுல், அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தொடக்கவீரராய் களமிறங்கிய லோகேஷ் ராகுல், சிறப்பாக விளையாட தவறிவிட்டார்.
ஆனால் சமீபத்தில், தொடக்கவீரராய் களமிறங்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. நியூஸிலாந்து அணியுடன் விளையாடிய முதல் பயிற்சி போட்டியில் தொடக்கவீரராக களமிறங்கிய லோகேஷ் ராகுல் 75 பந்துகளில் 68 ரன் சேர்த்தார், ஆனால் அவர் அடுத்த போட்டியில் விளையாடவில்லை.
சமீப காலத்தில் இந்திய அணியின் அஜிங்க்யா ரஹானே சிறப்பாக விளையாடி வருகிறார். அவருக்கு வாய்ப்பு கிடைக்காத போது, தவானுக்கு காயம் ஏற்பட்டதால் ரஹானேவை அணியில் சேர்த்தார்கள். அந்த வாய்ப்பை வீணாக்காத அஜின்க்யா ரஹானே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடி அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மூன்று அரைசதம் அடித்ததால் தொடர்நாயகன் விருதையும் அவர் வென்றார்.
“கிடைத்த வாய்ப்பை மூன்றாவது தொடவீரராக இருந்து சிறப்பாக விளையாடினார். அந்த இடத்திற்கு லோகேஷ் ராகுலை தான் வைத்திருந்தோம், ஆனால் ரஹானே சிறப்பாக விளையாடி அந்த இடத்தை பிடித்துவிட்டார். ஒரே இடத்தில் விளையாட நான்கு வீரர்கள் இருக்கும் போது, ஒரு வீரரை நீக்கியாக தான் வேண்டும். அந்த மூவரில் இருவர் தான் பதினோரு பேரில் இருப்பார்கள். இதனால் தான், அவரை நடுவரிசையில் விளையாட வைத்து குழப்பம் ஏற்படுத்த கூடாது என நினைக்கிறோம்,” என கோலி தெரிவித்தார்.