அடுத்த வருடத்திற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம் இந்த மாதம் 27 மற்றும் 28ஆம் தேதி அன்று பெங்களுருவில் நடக்கவிருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் நட்சத்திர வீரர்களை வாங்க பிளான் போடுகிறார்கள். அதே வகையில் கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் இந்த முறை நட்சத்திர வீரர்களை வாங்க பிளான் போடுகிறார்கள்.
முதல் ஐபில் சீசனில் அரையிறுதிக்கு சென்ற பஞ்சாப் அணி, 2014ஆம் ஆண்டு இறுதி போட்டிக்கு சென்று நூலளவில் கோப்பையை தவறவிட்டது. அதன் பிறகு இளம் வீரர்களை வைத்து விளையாடி கொண்டிருக்கும் பஞ்சாப் அணி கடந்த மூன்று சீசனாகவும் மோசமாக விளையாடி வந்தது. இந்நிலையில், இந்த முறை புதிய அணியை உருவாக்க பஞ்சாப் அணி அக்சர் பட்டேலை மட்டுமே தக்கவைத்து கொண்டது.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு சென்று முக்கிய வீரர்களாக வளம் வந்த வீரர்களை வாங்க பஞ்சாப் அணி திட்டமிட்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது. யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங்கை பஞ்சாப் அணி வாங்கும் என விரேந்தர் சேவாக் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
“பஞ்சாப் அணியில் பஞ்சாப் நட்சத்திரங்களான யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் விளையாட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று நான் நினைக்கிறன்,” என சேவாக் கூறினார்.

Photo by Ron Gaunt – Sportzpics – IPL
அவர்களது ஐபில் அணி இரண்டு வீரர்களையும் வெளியே விட்டது. ஐதராபாத் அணிக்காக விளையாடிய யுவராஜ் சிங்கை,எ ந்த அணி வெளியே விட்டது. முதல் சீசனில் இருந்து மும்பை அணிக்காக விளையாடிய ஹர்பஜனையும் மும்பை அணி வெளியே விட்டது.
“அவர் இப்போது இந்திய அணியில் இல்லை. ஆனார், அவர் அற்புதமான வீரர். தற்போது அணியில் இருக்கும் வீரரின் பார்ம் கூட சில நேரத்தில் காணாமல் சென்று விடும் அவரை போல் ஒரு வீரரை மீண்டும் நமக்கு கிடைப்பார் என்பது சந்தேகம் தான். அவர் பார்மில் இருந்தால், கண்டிப்பாக போட்டியை வென்று தருவார்,” என மேலும் சேவாக் கூறினார்.