Cricket, India, Sri Lanka, Rohit Sharma

தற்போது இந்திய அணி இலங்கையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சை முடிவு செய்தார்.

முதலில் விளையாடிய இலங்கை அணி, இந்திய பந்துவீச்சாளர்களுக்கு இடம் கொடுக்காமல் சிறப்பாக விளையாடி வந்தார்கள். ஆனால், அதற்கு பிறகு இலங்கை வீரர்கள் சொதப்பியதால், 216 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட், கேதார் ஜாதவ் மற்றும் சஹால் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 217 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ஷிகர் தவான் மற்றும் ரோஹித் ஷர்மா, பொறுமையாக தொடங்கினார்கள்.

ரோஹித் சர்மா பொறுமையாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றி தேடி தருவார் என்று நினைத்த போது, எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். கோட்டை தாண்டிய அவர், அந்த கோட்டை தொடவில்லை, இதனால் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது.

இதே ரன் அவுட் செப்டம்பர் 1க்கு மேல் நடந்திருந்தால், இது ரன்-அவுட் ஆவாது. கோட்டை தொடவில்லை என்றாலும் பரவாயில்லை, கோட்டிற்கு இந்த பக்கம் வந்தால் போதும் என புதிய விதிமுறையை அறிவித்தது ஐசிசி.

முதல் விக்கெட்டை தொடக்கத்திலேயே பறிகொடுத்தாலும், ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்தார்கள்.

அந்த ரன் அவுட் வீடியோவை பாருங்கள்:

https://twitter.com/84107010ghwj/status/899265793061421060

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *