இந்தியா – ஆஸ்திரேலியா விளையாடவேண்டிய மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி, மைதானம் ஈரமாக இருந்த காரணத்தினால் கைவிட பட்டது. இந்த தொடரை வெல்ல போவது யார் என்ற போட்டி ஐதராபாத் மைதானத்தில் நடக்கவிருந்தது. மைதானம் ஈரமாக இருந்த காரணத்தினால், இந்த போட்டி டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டது.
இந்த கடைசி போட்டி விறுவிறுப்பாக போகவிருந்த நிலையில், அனைத்து ரசிகர்களும் ஐதராபாத் மைதானத்தில் கூடி இருந்தார்கள். ஆனால், மைதானம் ஈரமாக இருந்ததால் ஐந்து ஓவர் போட்டி கூட விளையாடாமல் போனது. இதனால், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சோகத்துடன் வீடு திரும்பினார்கள்.
ஈரமாக இருந்த மைதானத்தை சரி செய்ய ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள், அந்த நேரத்தில் இந்திய வீரர்கள் கால்பந்து விளையாடி கொண்டிருந்தார்கள். ஆனால், ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் விராட் கோலி, ரோகித் ஷர்மா, ஹர்டிக் பாண்டியா ஆகியோர் இடது கையில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.
சில நிமிடங்களில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மற்றும் தற்போதைய விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி இவர்களுடன் சேர்ந்து இடது கையில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தார்.
ஒரே ஓவர் கூட பார்க்காமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வீடு திரும்பினார்கள். இதனால், 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதை அடுத்து, நியூஸிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அக்டோபர் 22ஆம் தேதி தொடங்குகிறது. இதனை அடுத்து நியூஸிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.