இந்தியன் ஸ்பின்னர்ஸ் இருக்கானுங்களே, ஒரு மணி நேரத்துல முடிச்சிட்டானுங்க; ஒழுங்கா தான் படிச்சிட்டு வந்தோம், ஆனாலும் பரீட்சையில பெயில் ஆகிட்டோம்னு பீல் ஆகுது - புலம்பிய ஆஸ்திரேலியா அணி பயிற்சியாளர்! 1

முதல் இரண்டு டெஸ்டில் தோல்வியுற்றது, படித்துவிட்டு வந்தும் பரீட்சையில் தேர்ச்சி அடையமுடியாமல் போனது போல இருக்கிறது என்று ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஆண்ட்ரு மெக்டொனால்ட்.

இந்தியாவிற்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அணி பார்டர் கவாஸ்கர் டிராபிக்காக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில், இரண்டையும் படுதோல்வி அடைந்து 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

இந்தியன் ஸ்பின்னர்ஸ் இருக்கானுங்களே, ஒரு மணி நேரத்துல முடிச்சிட்டானுங்க; ஒழுங்கா தான் படிச்சிட்டு வந்தோம், ஆனாலும் பரீட்சையில பெயில் ஆகிட்டோம்னு பீல் ஆகுது - புலம்பிய ஆஸ்திரேலியா அணி பயிற்சியாளர்! 2

இந்திய அணியின் ஸ்பின்னர்கள் இரண்டு டெஸ்டிலும் சேர்த்து 32 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகிய மூன்று ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் செலுத்திய ஆதிக்கம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாகவும் வெற்றியை ருசிப்பதற்கும் உதவியது.

ஆஸ்திரேலியா அணியினர் டெஸ்ட் தொடருக்கு துவங்குவதற்கு முன்னர் அஸ்வின், ஜடேஜா ஆகியோர்களின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்காக பிரத்தியேகமாக பயிற்சிகள் மேற்கொண்டனர். இந்தியா வருவதற்கு முன்னரே ஆஸ்திரேலியாவில் இந்திய மைதானங்கள் போல பிரத்தியேகமாக பிட்ச் தயார் செய்து பயிற்சிகளையும் மேற்கொண்டனர். ஆனாலும் எதுவும் அவர்களுக்கு எடுபடவில்லை.

இந்தியன் ஸ்பின்னர்ஸ் இருக்கானுங்களே, ஒரு மணி நேரத்துல முடிச்சிட்டானுங்க; ஒழுங்கா தான் படிச்சிட்டு வந்தோம், ஆனாலும் பரீட்சையில பெயில் ஆகிட்டோம்னு பீல் ஆகுது - புலம்பிய ஆஸ்திரேலியா அணி பயிற்சியாளர்! 3

இந்நிலையில் இந்த தோல்வி குறித்தும், இதுக்கு பின்னர் இருக்கும் மனநிலை குறித்தும் பேசியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரு மெக்டொனால்ட்.

“நான் இப்போது வரை எனது பயிற்சியில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. பயிற்சியில் எந்தவித சந்தேகமும் இல்லை. பெங்களூருவில் ஆஸ்திரேலிய வீரர்கள் மிகச் சிறப்பாக பயிற்சிகளை மேற்கொண்டனர். பயிற்சியின்போது சலுகைகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவு வரை நாங்கள் விளையாடிய விதம், நன்றாக பயிற்சி செய்து வந்திருக்கிறோம் என்று காட்டியது. ஆனால் அடுத்தநாள் குறிப்பிட்ட ஒரு மணி நேரத்தில் ஆட்டம் தலைகீழாக மாறிய பிறகு பலரும் தங்களது கருத்தை மாற்றிக்கொண்டு மீண்டும் விமர்சனங்கள் செய்ய துவங்கிவிட்டனர்.

இந்தியன் ஸ்பின்னர்ஸ் இருக்கானுங்களே, ஒரு மணி நேரத்துல முடிச்சிட்டானுங்க; ஒழுங்கா தான் படிச்சிட்டு வந்தோம், ஆனாலும் பரீட்சையில பெயில் ஆகிட்டோம்னு பீல் ஆகுது - புலம்பிய ஆஸ்திரேலியா அணி பயிற்சியாளர்! 4

இந்த குறிப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை, எங்களது பயிற்சிகள் நன்றாக இருந்தது. அணுகுமுறை நன்றாக இருந்தது. ஆனால் அந்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு அனைத்தும் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. உண்மையில், இதற்கும் நாங்கள் பயிற்சிகள் செய்துவிட்டு தான் வந்தோம். ஆனாலும் எதுவும் சாதகமாக அமையவில்லை. நன்றாக படித்துவிட்டு வந்து பரீட்சையில் தேர்ச்சி பெறாதது போல உணர்கிறேன்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *