இந்தியாவோட தோல்வி இந்த இடத்துலயே முடிவு ஆகிடுச்சு - கண்ணீருடன் பேசிய ராகுல் டிராவிட்! 1

எங்களுடைய தோல்வி இந்த இடத்தில் தான் உறுதியானது என்று வருத்தத்துடன் பேட்டி அளித்துள்ளார் ராகுல் டிராவிட்.

இந்திய அணிக்கு டி20 உலககோப்பை தொடர் மிகச் சிறப்பாக துவங்கியது. பலம்மிக்க பாகிஸ்தான் அணியை வீழ்த்தி துவங்கிய இந்த தொடர் சற்று மோசமாகவே முடிந்திருக்கிறது என்று கூறலாம்.

ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா

 

அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா, இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்து 10 ஓவர்களில் 60 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்த பத்து ஓவர்களில் பாண்டியா மற்றும் விராட் கோலி இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தி 168 ஆக மாற்றினார்.

இரண்டாவது பேட்டிங் செய்ய இந்த மைதானம் நன்றாக இருக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு இங்கிலாந்து அணி துவக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இருவரும் விக்கெட் இழப்பின்றி இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து இலக்கை கடந்து வெற்றியை பெற்றனர். இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து உலக கோப்பையில் இருந்து மோசமான நிலையில் வெளியேறியது.

ராகுல் டிராவிட், விராட் கோலி
ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி

இத்தனை போட்டிகள் வரை இந்தியாவிற்கு ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுலின் துவக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், மிடில் ஆர்டரில் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் செய்த பேட்டிங் சிறப்பாக அமைந்ததால் நல்ல ஸ்கோர் எட்ட முடிந்தது.

பந்துவீச்சிலும் அர்சதீப் சிங் சீரான இடைவெளிகளில் வீக்கெட்டை வீழ்த்தி வந்ததால் அதுவும் சாதகமாக அமைந்தது. ஆனால் அரை இறுதியில் அது அப்படியே தலைகீழாக மாறி, பந்துவீச்சில் முழு சொதப்பலாக அமைந்துவிட்டது.

ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட்

இந்நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக எது அமைந்தது? என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ராகுல் டிராவிட். அவர் கூறியதாவது:

“செமி பைனல் தோல்வி எங்களை மிகப்பெரிய தாக்கத்திற்கு உள்ளாகியது. மூன்று விதத்திலும் எங்களை இங்கிலாந்து வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி விட்டனர். நன்றாக இந்த தொடர் முழுவதும் பேட்டிங் செய்து வந்தோம்.

ஆனால் அரை இறுதி போட்டியில் குறிப்பாக அடிலெய்டு மைதானத்தில் 180 ரன்களுக்கு மேல் அடித்திருக்க வேண்டும். அந்த வகையில் நாங்கள் ஒரு 20 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம். அந்த இடத்திலேயே எங்களுக்கு பின்னடைவு வந்துவிட்டது.

அதேபோல் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்ய நன்றாக இருந்தது. அதை அவர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த போட்டிக்கு முன்னர் வரை இந்தியாவிற்கு இந்த தொடர் மிகச் சிறப்பாகவே இருந்தது என்று கூறுவேன்.

ஓரிரு தினங்கள் இந்த தாக்கத்திலிருந்து வெளிவருவதற்காக ஓய்வு எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த போட்டிகளுக்கு தயாராக வேண்டும் என்று வீரர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். மனதளவில் திடமாக இருங்கள்.” என்று ராகுல் டிராவிட் பேசினார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *