இதுவரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா அணிகள் இந்த தொடரில் நான்கு போட்டிகளில் மோதியுள்ளது இதில் முதல் ஒரு நாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது, பிறகு நடந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டிகளில் இந்தியா அணி வெற்றி பெற்றது.
அதற்கு பிறகு விளையாடிய நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி மிகவும் சுலபமான இலங்கை அடைய முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் அணைத்து விக்கெட்களையும் இழந்து மிகவும் மோசமாக தோல்வி அடைந்தது.
இதனால் இந்த தொடரில் இந்தியா இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஐந்தாது ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை வெல்லும் இதுவே வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்த தொடர் சமநிலையில் முடியும்.
தற்போது ஐந்தாவது ஒரு நாள் போட்டியலில் இந்திய அணியில் எந்த எந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்று ஒரு கணிப்பை பார்க்கலாம்.
ரஹானே :
இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்றால் அது ரஹானே தான் இந்த தொடரில் விளையாடிய அணைத்து போட்டிகளிலும் ரஹானே மிக சிறப்பாக விளையாடியுள்ளார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடும் ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் ரஹானே கண்டிப்பாக இடம் பெறுவர் என்று தெரிகிறது.
தவான் :
இந்திய அணியின் சிறந்த துடக்க ஆட்டக்காரரான தவான் இந்த தொடரில் மூன்று போட்டிகளில் நன்றாக துவக்கத்தை கொடுத்து உள்ளார். நான்காவது ஒரு நாள் போட்டியில் தான் இவர் சரியாக விளையாடவில்லை மற்ற மூன்று போட்டிகளிலும் இவர் நன்றாக விளையாண்டார். இதனால் நாளைய போட்டியில் தவான் களம் இறங்கி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் சிறப்பாக விளையாடுவார் என்று நம்பலாம்.
விராட் கோஹ்லி ( கேப்டன் ) :
இவர் கோஹ்லி தான் தற்போது இந்திய அணியின் கேப்டன் இவர் நடந்து முடிந்த நான்கு ஒரு நாள் போட்டியில் சுமாராக விளையாடினார். இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இவர் இல்லாமல் அந்த போட்டியில் இந்திய அணி 43 ஒவேர்களிலேயே அதிக ரன்களை எட்டியது. இந்திய அணி நாளை போட்டியிலும் கோஹ்லி சிறப்பாக விளையாடுவார் என தெரிகிறது.
யுவராஜ் சிங் :
யுவராஜ் சிங் நடந்து முடிந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் இடம் பெறவில்லை அவருக்கு பதிலாக நான்காவது ஒரு நாள் போட்டியில் தினேஷ் கார்த்திக் விளையாடினார். அந்த போட்டியில் ரஹானே தோனியை தவிர எந்த வீரர்களும் அடிக்கவில்லை. நாளைய போட்டியில் யுவராஜ் சிங் மீண்டும் இந்திய அணியில் விளையாடுவார் என்று எதிர் பார்க்கின்றோம்.
மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர் ) :
மகேந்திர சிங் தோனி இந்த தொடரில் மிகவும் சிறப்பாகவே விளையாடுகிறார் என்று தான் சொல்ல வேண்டும் சென்ற ஆட்டத்திலும் தோனி நன்றாக விளையாடினார் இந்திய அணியை வெற்றிக்கு அலைந்து சென்று இருந்தார் ஆனால் எதிர் பாரத விதமாக தோனி அவுட் ஆகி விட்டார். இவர் நாளைய போட்டியில் சிறப்பாக விளையாடுவர் என நம்பலாம்.
கேதார் ஜாதவ் :
கேதார் ஜாதவ் இந்த தொடரில் கடைசி நேரத்தில் வந்து இந்திய அணிக்கு ரன்களை கொடுக்கிறார். இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இவர் சிறப்பாகவே அடித்து ஆடுகிறார், எனவே கேதார் ஜாதவ் நாளைய போட்டிகளிலும் சிறப்பாக அடித்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
ஹர்டிக் பாண்டியா :
ஹர்டிக் பாண்டியா தற்போது நடை பெற்று கொண்டு இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் சுமாராக தான் செயல் பட்டு கொண்டு இருக்கிறார் எனவே இவர் நாளைய போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர் பார்க்கலாம்.
அஸ்வின் :
அஸ்வின் இந்த தொடரில் பந்து வீச்சில் பெரிதாக எதுவும் செயல் படுத்தவில்லை எனவே இவர் நாளைய போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர் பார்க்கலாம்.
குலதீப் யாதவ் :
இந்தியா அணியின் பந்து வீச்சாளர்களில் தற்போது குலதீப் யாதவ் தான் சிறப்பாக பந்து வீசி கொண்டு இருக்கிறார். இது போலவே குலதீப் யாதவ் நாளைய போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவார்.
புவனேஷ்வர் குமார் :
எதிரணியின் ரன்னை மட்டும் கட்டுப்படுத்தாமல் தேவை படும் நேரங்களில் முக்கியமான விக்கெட்டை எடுக்கும் வல்லமை வாய்ந்தவர் புவனேஸ்வர் குமார். இதே போல், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக முக்கியமான விக்கெட்டுகளை இந்தியா வெற்றி பெற உதவுவார் என எதிர்பார்க்க படுகிறது.
உமேஷ் யாதவ் :
நாளைய போட்டியில் உமேஷ் யாதவ் இந்திய அணியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர் பார்க்கலாம்.