எம்.எஸ்.கே.பிரசாத் மீது கோவமாக இருக்கும் தோனி ரசிகர்கள்

போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் தோனியாக இருந்தாலும் மாற்றுவீரர் களமிறக்கப்படுவார் என தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் கடுமையாக கொந்தளித்துள்ளனர்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள், டி-20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதில் எதிர்பார்த்தது போல தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தவிர, யுவராஜ் சிங் நீக்கப்பட்டார்.

இந்த அணியை தேர்வு செய்ததுகுறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கூறுகையில்,’ சரியாக விளையாடாத வீரர்கள் நீக்கப்படுவார்கள். அது தோனியாக இருந்தாலும் சரி. அவருக்கு பதில் வேறு மாற்றுவீரர் களமிறக்கப்படுவார்.’ என்றார்.

இதனால் இந்திய ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். இதுதொடர்பாக ரசிகர்கள், டுவிட்டரில்,’ முதலில் கட்டாயப்படுத்தி கேப்டன் பொறுப்பில் இருந்து விலக்கினார்கள். தற்போது ஓய்வுக்கு அடித்தளம் அமைக்கிறார்கள்.’ என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர் இதுவரை வெறும் 6 டெஸ்ட், 17 ஒருநாள் போட்டிகளில் மட்டும் பங்கேற்ற ஒருவர், தற்போது தேர்வுக்குழு தலைவர். அவர் தோனியை பற்றி விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. என குறிப்பிட்டுள்ளார். இதுபோல இன்னும் தோனி ரசிகர்கள் பிரசாத்தை தாறுமாறாக வசைபாடிவருகின்றனர்.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.