“Chokers” இந்தியா இன்னொரு தென்னாபிரிக்காவா மாறிட்டு வருது – உண்மையை போட்டுடைத்த கபில் தேவ்!

முக்கியமான போட்டிகளில் தோல்வியை தழுவி இந்தியா இன்னொரு தென் ஆப்பிரிக்காவாக மாறி வருகிறது என்று விமர்சித்திருக்கிறார் கபில் தேவ்.

கடைசியாக 2013 ஆம் ஆண்டு ஐசிசியின் சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்ற பிறகு, 9 வருடங்களாக ஐசிசி நடத்தும் எந்த ஒரு கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்லை. கால் இறுதி மற்றும் அரை இறுதி போட்டிகள் வரை முன்னேறுகிறது. ஆனால் அதில் படுமாசமாக தோல்வியை தழுவி வெளியேறி விடுகிறது.

வழக்கமாக தென் ஆப்பிரிக்க அணி உலககோப்பை போன்ற பெரிய தொடருக்கு முன்பு பலம் பொருந்திய அணியாக காணப்படும். ஆனால் கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வியை தழுவி வெளியேறிவிடும்.

நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டு உலககோப்பை சூப்பர் 12 சுற்றிலும் நெதர்லாந்து அணியிடம் தோல்வியை தழுவி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. இதன் காரணமாக அந்த அணிக்கு சோக்கர்ஸ் என்ற பெயர் உண்டு.

தற்போது இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை போல ‘சோக்’ செய்து முக்கியமான போட்டிகளில் தோல்வியை தழுவுகிறது என்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார் கபில் தேவ்.

“போட்டி முடிந்து விட்டது. இந்தியா தோல்வி பெற்றுவிட்டது. அதற்காக இவ்வளவு கீழே இறங்கி அவர்களை விமர்சிப்பதில் நான் உடன்படவில்லை. ஆம், இந்த தோல்விக்காக அவர்கள் விமர்சனத்திற்கு உட்படக்கூடியவர்கள். அது அவர்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

இந்தியாவை விட இங்கிலாந்து அணி இந்த மைதானத்தை மிகச் சிறப்பாக கணித்து விளையாடி விட்டார்கள். இதற்காக ஒட்டுமொத்த இந்திய அணியையும் கண் முடித்தனமாக விமர்சிக்க கூடாது. ஏனெனில் இதே அணிதான் கடந்த சில போட்டிகளாக பல பாராட்டுகளை பெற்றது .”

“ஆம், இப்போதும் வெளிப்படையாக கூறுவேன். இவர்கள் முக்கியமான போட்டிகளில் திணறுகிறார்கள். சோக் செய்து விடுகிறார்கள். இந்த விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, அடுத்தடுத்த போட்டிகளில் என்ன செய்ய வேண்டும்? அணியின் எதிர்காலத்திற்கு என்ன தேவை? என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இளம் வீரர்களை அணிக்குள் எடுத்து வருவதற்கு இதுதான் சரியான தருணம். அதற்கான முடிவுகளை விரைவில் எதிர்பார்க்கிறேன்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.