இவரை அடக்கணும்னா, இது மட்டும் தான் ஒரே வழி - இங்கிலாந்துக்கு டிப்ஸ் கொடுக்கும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்! 1

சூரியகுமார் யாதவ் ரன் குவிப்பதை தடுக்க வேண்டும் என்றால், இங்கிலாந்து அணி இதை மட்டும் செய்தால் போதும் என்று அறிவுரை கூறியுள்ளார் மிஸ்பா உல் ஹக்.

எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் செமி-பைனலில் உள்ளது. முதல் செமி பைனலில் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவி வெளியேறியுள்ளது. இதனால் முதல் அணியாக பாகிஸ்தான் ஃபைனலுக்குள் கால் வைத்துள்ளது.

பாகிஸ்தான் அணி

அடிலேய்டில் நடக்கும் இரண்டாவது செமி பைனலில் இந்தியா இங்கிலாந்து மோதுகின்றன. இந்திய அணிக்கு அதிதீவிர பார்மில் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் இருக்கின்றனர்.

இதில் சூரியகுமார் யாதவ் குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவித்து வருவதால் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். மேலும் விராட் கோலி நாக்அவுட் போட்டிகள் என்றாலே, வழக்கத்திற்கு மாறாக சிறந்த பார்மில் விளையாடுவார் என்பதால் அவரும் முக்கியமான வீரர்.

விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்

இந்நிலையில் சூரியகுமார் யாதவின் ரன் குவிக்கும் வேகத்தை கட்டுப்படுத்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இதை மட்டும் செய்தால் போதும் என்று அறிவுரை கூறியிருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக்.

“சூரியகுமார் யாதவ் பந்து வீச்சாளரின் வேகத்தை பயன்படுத்தியே அதிக ஷாட்கள் விளையாடுகிறார். மார்க் வுட் போன்ற வீரர் அதிக வேகமாக வீசும் போது அவர் எளிதாக ஸ்டம்பிற்கு பின்னே தூக்கி அடித்து பௌண்டரி அல்லது சிக்ஸர்களாக மாற்றி விடுகிறார்.

சூரியகுமார் யாதவ்

இங்கிலாந்து அணி மற்ற அணிகளை போல அந்த தவறை மட்டும் செய்து விடக்கூடாது. ஃபைன்-லெக் மற்றும் ஸ்கொயர் லேக் இரண்டு திசையிலும் நல்ல ஃபீல்டர்களை வைக்க வேண்டும். வேகத்தை மாற்றி மாற்றி இவருக்கு வீச வேண்டும். அப்பொழுது தான் ஒரு சில தவறான ஷாட்களால் எளிதாக கேட்ச் கொடுத்து வெளியேறி விடுவார்.

விராட் கோலிக்கு ஸ்லிப் திசையில் ஒன்று அல்லது இரண்டு வீரர்களை வைத்து ஸ்டம்பிற்கு வெளியே வழக்கம் போல பந்துவீச வேண்டும். அவரது வீட்டையும் எளிதாக வீழ்த்தி விடலாம். இது மட்டுமே இங்கிலாந்து அணி வெல்வதற்கான ஒரே வழி.” என்றும் பேசினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *