நண்பேண்டா!! நெஹ்ராவின் ஓய்வு குறித்து யுவ்ராஜ் சிங் உருக்கமான பதிவு 1

நேற்றொடு தனது 18 வருட கிரிக்கெட் வாழக்கையை மகிழ்ச்சியாக முடித்துக்கொண்டார் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா. 38 வயதான ஆசிஷ் நெஹ்ரா 1999ல் இருந்து இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடி வருகிறார்.

இந்திய அணிக்காக குறைந்த சர்வதேச போட்டிகலே ஆடியிருந்தாலும் அவர் அணி வீரர்கள் மற்றும் மக்களிடம் சேர்த்து வைத்த நினைவுகள் அதிகமானவை.

2003 ஒருநாள் உலகக்கோப்பையில் அவர் ஆடிய விதம் இந்திய ரசிகர்களால் ஒருபோதும் மறக்கஇயலாதது. அதுவும் இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் வீசிய அந்த் ஸ்பெல் அனைவராலாம் பாராட்டப்பட்டது. அந்த உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டிவரை முன்னேறி இரண்டாம் இடம் பிடித்தது.

அதன் பின்னர் 2004ல் தன் கடைசி ஒருநாள் போட்டியில் ஆடிய் நெஹ்ரா, 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் முக்கிய நபராவார். அந்த அணியில் நினைவுகளால் ஊறிப்போன அணியின் சகா யுவ்ராஜ் சிங், நெஹ்ராவின் ஓய்வு குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவருடனான் நினைவுளை உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டதாவது,

“நெஹ்ரா- எனது தோழன் ‘அஷு’வைப் பற்றி கூறவேண்டுமானால் அவர் ஒரு முகவும் நேர்மையான மனிதர். அவரை விட ஒரு நேர்மையாக ஒன்று இருக்குமானால், ஒரு தூய்மையான புத்தகத்தால் மட்டுமே முடியும் அவ்வளவு நேர்மையானவர் அவர். இதனைப் படிக்கும் போது நீங்கள் வாய் பிளந்து போகலாம்.

Image result for nehra yuvraj

ஒரு மக்கள் அறிந்த பிரபலத்தை பலரும் பலவாறு அனுமானித்து வைத்திருப்பார்கள். பிரபலங்களும் வேறு மாறி நடந்து கொள்வார்கள். இந்த விசயத்தில் அஷு மிகவும் நேர்மரையானவர், அவரின் அந்த பண்பினால் சிலர் பாதிக்கபட்டும் உள்ளனர். ஆனால், எனக்கு எப்போதும் அவர் அவர் நெஹ்ரா ஜி தான். எப்போதும் எந்த ஒரு நேரத்திலும் அணியை விட்டுக்கொடுக்காதவர் நெஹ்ரா.

நான் முதல் என்னுடைய அண்டர்-19 நாட்களில் அவரைப் பார்த்தேன். அவர் இந்திய அணிக்காக ஆடிக்கொண்டிருந்தார். ஹர்பஜன் சிங்குடன் அணியில் இருந்தார் நெஹ்ரா. நான் அப்போது ஹரபஜனை பார்க்க சென்றேன், அங்கு ஒரு உயரமான, ஒள்ளியான ஓர் இடத்தில் நிற்க்க கூட முடியாமல் துறு துறுவென இருந்த ஒரு மனிதரைப் பார்த்தேன்.Image result for nehra yuvraj

ஓரு பூனையைப் போல அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார். திடீர் திடீரென பயிற்சி மேற்கொள்வார். திடீரென உக்கார்ந்துகொள்வார், கை, கால் காதுகளை திருகிக்கொண்டு இருப்பார். யாரோ அவரது பேன்ட்டுக்குள் எறும்புகளை விட்டுருப்பார்கள் போல அதனால் தான் அப்படி இருக்கிறார் என நினைத்தேன்.Image result for nehra yuvraj

அப்போது, கேப்டன் சௌரவ் கங்குலி அவருக்கு ஒரு பட்டைப் பெயரை வைத்தார், அது தான் பாப்பெட். தொன தொனவென பேசிக்கொண்டே இருப்பார். தன்ணீருக்கு அடியிலும் பேசும் வல்லமை படைத்தவர் நெஹ்ரா. ஆனால், எனக்கு அவர் எப்போது பேச்சை நிருத்துவார் என்று தான் இருந்தது. மேலும், அவருடைய பாடி லாங்குவேஜை பார்க்கவே சிரிப்பாக இருந்தது.Image result for nehra yuvraj

அவரிடம் இருந்து நான் அதிகம் உத்வேகம் பெற்றுள்ளேன். இதை நான் அவரிடம் கூட சொன்னதில்லை. பல அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டு, வலியுடன் இந்த மனிதனால் 38 வயதிலும் வேகமாக பந்து வீச முடிகிறது என்றால், 36 வயதில் என்னால் ஏன் பேட்டிங் செய்ய முடியாது? உண்மையில், இந்த சிந்தனை தான் இன்று கூட என் மனதில் ஓடியது.

முழங்கை, இடுப்பு, கணுக்கால், விரல், இரண்டு முழங்கால்கள் என மொத்தம் அவர் 11 அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறார். ஆனால், இப்போதும் அவரால் சிறப்பாக செயல்பட முடிகிறது என்றால், அவரது கடின உழைப்பும், கொழுந்துவிட்டு எரியும் ஆசையுமே காரணம். 2003-ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போது அவரது கணுக்காலில் கடுமையான காயம் ஏற்பட்டு இருந்தது.Image result for nehra yuvraj

அடுத்த போட்டியில் நிச்சயம் அவர் விளையாட முடியாத சூழல். ஆனால் அவரோ ‘நான் கண்டிப்பாக விளையாடியே தீருவேன்’ என்று மற்றவர்களுக்கு துன்பம் கொடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான அடுத்தப் போட்டியில் 23 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றிப் பெற வைத்தார்.

2011-ல் நடந்த உலகக் கோப்பை தொடரின் போது, பாகிஸ்தானிற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடிய ஆஷு, எதிர்பாராதவிதமாக காயம் அடைந்ததால், இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவரால் விளையாட முடியாமல் போனது.

ஆனால், மும்பையில் நடந்த இறுதிப் போட்டியின் போது, வீரர்களுக்கு குடிநீர், டவல், அட்வைஸ் என அணிக்கு தேவைப்படும் நேரத்தில் உதவி செய்தார். ஒரு மூத்த வீரராக இருந்தும் கூட, இது போன்ற வேலைகளை செய்ய உண்மையில் நல்ல மனம் வேண்டும்.

அவருக்கு நல்ல குடும்பம் அமைந்துள்ளது. ஆருஷ், ஆரைனா என இரண்டு அற்புதமான பிள்ளைகள் உள்ளனர். ஆருஷின் பந்துவீச்சு அவனது தந்தையை விட நன்றாக உள்ளது (நன்றிக் கடவுளே!) இது எனக்கு மிகவும் உணர்ச்சிமயமான தருணம்.நண்பேண்டா!! நெஹ்ராவின் ஓய்வு குறித்து யுவ்ராஜ் சிங் உருக்கமான பதிவு 2

அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் அப்படித் தான் நிச்சயம் இருக்கும். நான் எப்போதும் கொண்டாட, கிரிக்கெட் எனக்கு ஒரு உண்மையான நண்பனை வழங்கியுள்ளது”. இவ்வாறு யுவராஜ் சிங் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

நெஹ்ராவின் ஓய்விற்கு யுவராஜின் உணர்ச்சிப் பதிவு:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *