உமேஷ் யாதவ் இறுதியாக இந்திய அணியில் தனக்கு என ஒரு பந்து வீச்சில் இடத்தை பிடித்து நிலைநாட்டி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். முகமத் சாமி மற்றும் ஸ்டார்க் போன்ற வீரர்கள் அடிக்கடி உடல் காயங்களால் அணியில் தொடர்ந்து விளையாட முடியாமல் இருக்கிறார். ஆனால் உமேஷ் யாதவ் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார் இதனால் தான் இவர் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடித்து வருகிறார்.
இன்று நடக்கும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடுகிறது இந்த போட்டியில் உமேஷ் யாதவ் திறமையாக பந்து வீசுவார் என்று எதிர் பார்க்கலாம்.
சாஹீர் கானின் அறிவுரை :
அணைத்து பந்து வீச்சாளர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக ஒரு வீரர் இருப்பார் அது போல தான் உமேஷ் யாதவ்க்கும் ஒரு சிறந்த வழிகாட்டி இருக்கிறார் அவர் தான் இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் சாஹீர் கான் இருக்கிறார்.அவர் தற்போது உமேஷ் யாதவ்க்கு அறிவுரைகளை கூறியுள்ளார்.
“நான் தொடர்ந்து தவறுகளிலிருந்து கற்கிறேன். ஒரு இளைஞனாக நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஆனால் ஜாகீர் பாய் ஒரு விஷயம் சொன்னார். நீங்கள் ஒரு இளைய மற்றும் அணியில் புதுமுகமாக இருக்கும் போது, உங்கள் தவறுகளை பற்றி நீங்கள் விரைவாக அறிந்து கொள்வது நல்லது, இது உங்களுக்கு மிகச் சிறந்தது … விரைவாக நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.இதுதான் நான் முயற்சித்து, செய்வதுதான், “என்றார் யாதவ் பிசிசிஐ தொலைக்காட்சியில் கூறியுள்ளார்.
“நான் உட்கார்ந்து நான் செய்த தவறுகளை பற்றி யோசிக்கிறேன். நான் அடுத்த போட்டியில் இருந்து என் தவறுகளை சரி செய்ய உள்ளேன்.
நான் முயற்சி மற்றும் நேர்மறை புள்ளிகள் மீது இன்னும் கவனம் செலுத்த வேண்டும்… வலுவான மற்றும் பலவீனமான புள்ளிகள் என்ன வென்று கண்டுபிடிக்க வேண்டும். ஒரு வேகமான பந்து வீச்சாளராக இருப்பது முக்கியம், “என்று உமேஷ் யாதவ் கூறினார்.
தற்போது இந்திய அணியில் உமேஷ் யாதவ் ஒரு சிறந்த பந்து வீச்சாளராக உள்ளார்.
நான் தற்போது இந்திய அணியின் பந்து வீச்சாளராக இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது இந்திய அணிக்காக நான் தொடர்ந்து உழைப்பேன்” என்று கூறினார்.
இன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய தனது 5வது ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை வெல்லும் இதுவே வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றால் இந்த தொடர் சமநிலையில் முடியும்.