ஸ்டம்பிங் செய்வதில் மகேந்திர சிங்க் தோனி கிங் என்று நாம் அனைவருக்குமே தெரியும். அனைத்து போட்டிகளிலும் ஸ்டம்பிங் செய்து அசத்துவார். இதனால், இன்று நடந்த பயிற்சி போட்டியலில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில், ஆல்-ரவுண்டர் கோலின் டி க்ராந்தோம்மேவை வேகமாக ஸ்டம்பிங் செய்து அசத்தினார்.
ஜடேஜா ஓவரில் பெரிய சிக்ஸர் அடிக்கலாம் என ஏறி வந்தார் க்ராந்தோம்மே, ஆல்-ரவுண்டர் ஜடேஜா அற்புதமாக பந்து வீச, அந்த பந்தை க்ராந்தோம்மே தொடவில்லை. இந்நிலையில், பந்து நேராக தோனி கைக்கு செல்ல, மீதம் உள்ள வேலையே அவர் முடித்து விட்டார்.
இது ரவீந்திர ஜடேஜாவுக்கு 2வது விக்கெட் ஆகும். முதல் விக்கெட் லுக் ராஞ்சி என்பது குறிப்பிடத்தக்கது. சதத்தை நோக்கி சென்ற ராஞ்சியை, தன்னுடைய சூழலில் திணற வைத்து, போல்ட் ஆக்கினார் ஜடேஜா.
தோனி செய்த வேகமான ஸ்டம்பிக்கை இங்கே பாருங்கள்:
https://twitter.com/lKR1088/status/868788916823969795