பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வெற்றி பெற்றதற்கு பிறகு அன்று இரவு உணவை ஏற்பாடு செய்தது விராட் கோலியின் தொண்டு நிறுவனம்.
தொண்டு நிறுவனத்துடன் நெருக்கமாக இருப்பார் கோலி, அதே சமயத்தில் விராத் கோலி அறக்கட்டளை ஒரு சில நாட்களுக்கு முன் குழந்தைகளுக்கு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
மகேந்திர சிங் தோனி, சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் ஆகியோருடன் இந்திய அணியே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது. அவர்களுடன் ரோகித் ஷர்மாவின் மனைவி ரித்திகா சஜிதே மற்றும் ஷிகர் தவானின் மனைவி ஆயிஷா முகர்ஜியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விராட் கோலியின் தொண்டு நிறுவனத்தை சச்சின் டெண்டுல்கர் பாராட்டினார்.
இதற்கு,”எங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு நன்றி பாஜி, நீங்கள் கலந்து கொண்டதற்கு நான் கொடுத்துவைக்க வேண்டும்,” என கோலி தெரிவித்தார்.
சச்சினை தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் பாராட்டை தெரிவித்தார்.
“நன்றி பஜ்ஜி, நீங்கள் சந்தோசமாக இருந்தீர்கள் என நம்புகிறேன்,” என விராட் கோலி நன்றி தெரிவித்தார்.
அதன் பிறகு, அந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவர்க்கும் நன்றி தெரிவித்தார்.