ஏபி டி வில்லியர்ஸ்
தென்னாபிரிக்காவின் அட்டகாசமான அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ், இதுவரை தென்னாபிரிக்கா அணிக்காக பல முக்கிய இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் வேகமான அரைசதம், சதம், 150 என அனைத்து சாதனைக்கு சொந்தக்காரர் அவர் தான். இவர் பேட்டிங் விளையாட மைதானத்திற்குள் வந்தாலே போதும், ரசிகர்கள் குதூகலம் ஆகி விடுவார்கள். 409 போட்டிகளில் விளையாடி இருக்கும் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் 319 சிக்ஸர்களை விளாசி தள்ளியுள்ளார்.